
latest news
தண்ணீர் இல்லை… உட்கார சேர் இல்லை… தவெக மாநாடு பரிதாபங்கள்!…
TVK Maanadu: தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாடு மதுரை பாராபத்தியில் இன்று காலை நடக்கவுள்ளது. நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் இதில் கலந்துகொண்டு பேசவிருக்கிறார். மாநாட்டிற்கு தேவையான பணிகளை கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கடந்த சில நாட்களாகவே கவனித்து வந்தார்.
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் பகுதியில் உள்ள விக்கிரவாண்டிகள் நடைபெற்றதே பல குளறுபடிகள் நடந்தது. மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு குடிநீர் இல்லை.. உட்காருவதற்கு சேர் வசதிகள் செய்யப்படவில்லை என பல புகார்களை அதில் கலந்து கொண்டவர்களை சொன்னார்கள்.

இந்நிலையில்தான் இன்று இரண்டாவது மாநாடு மதுரையில் நடக்கவிருக்கிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு மட்டும் இல்லாமல் மற்ற மாநிலங்களில் இருந்தும் விஜய் ரசிகர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள், பேருந்துகள். கார், இருசக்கர வாகனங்கள்,ரயில், விமானம் ஆகியவை மூலம் அவர்கள் மாநாட்டுக்கு வருகிறார்கள். மதுரையில் வெயில் கொளுத்தி வரும் நிலையில் ஏராளமான தொண்டர்கள் திரண்டு வருகிறார்கள். வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் சேர்களை தலைக்கும் மீது தூக்கி நிறுத்தியபடி அவர்கள் அமர்ந்திருக்கிறார்கள். இந்நிலையில்தான் இன்று நடக்க உள்ள மாநாடு தொடர்பாகவும் அதில் கலந்து கொள்ள சென்றவர்கள் சில அதிருப்திகளை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
மாநாட்டில் ஒன்றரை லட்சம் பேருக்கு இருக்கைகள் அமைப்பதாக சொல்லப்பட்டு ஐந்து பேரிடம் ஒப்பந்தம் போட்டார்கள். ஆனால் அதில் நான்கு பேர் கடைசி நேரத்தில் இருக்கைகளை தர முடியாது என சொல்லி விட்டார்கள். எனவே விஜய் ரசிகர்களை பார்ப்பதற்காக நடந்து செல்வதற்காக போடப்பட்டிருக்கும் பலகையின் அருகே மட்டுமே இருக்கையில் போடப்பட்டிருக்கிறது.
மற்றவர்களுக்கு இருக்கைகள் இல்லை. அதேபோல் பெண்களுக்கு தனியாக இருக்கைகள் போடப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அதை செய்யவில்லை. அதேபோல் கழிப்பிட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும் அதில் தண்ணீர் வரவில்லை. இது தொடர்பாக அங்கிருந்து பௌன்ஸர்களிடம் தொண்டர்கள் கேட்டபோது தலைமை சொன்னால் மட்டுமே தண்ணீர் தருவோம் என சொல்லி இருக்கிறார்கள்.

இதுவும் பலருக்கும் அதிருப்தியை கொடுத்திருக்கிறது. ஏற்கனவே விஜய் கொடி ஏற்றுவதற்காக நேற்று நடப்பட்ட 100 அடி உயரமுள்ள கொடிக்கம்பம் இடிந்து கீழே விழுந்தது நல்ல வேளையாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஒருவரின் கார் மட்டும் பலத்த சேதத்திற்கு உண்டானது.
இப்படி பல குளறுபடிகளுக்கு நடுவே இன்று மாநாடு நடைபெற்றாலும் இந்த மாநாட்டில் விஜய் என்ன பேசப் போகிறார் என்கிற ஆர்வமும் எதிர்பார்ப்பும் அவரின் ரசிகர்களிடமும் கட்சி தொண்டர்களிடமும் இருக்கிறது.