
latest news
கேப்டன் பிரபாகரனில் நூலிலையில் உயிர் தப்பிய விஜயகாந்த்… ஆர்.கே.செல்வமணி சொன்ன தகவல்…
Published on
எண்பதுகளின் காலகட்டத்தில் ரஜினி, கமல் என இரு பெரும் துருவங்கள் தமிழ் சினிமாவை ஆட்டி படைத்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் அவர்களுக்கு இணையான ரசிகர் படையை கொண்டிருந்தார் விஜயகாந்த். தனக்கென தனி ஒரு பாணியில் அமைத்து தென்னக மக்களின் சூப்பர் ஸ்டார் ஆனார். இவரது படங்களில் சண்டைக் காட்சிகள் தனித்துவம் பெறும், அதனால் வெகு விரைவிலேயே ஆக்சன் ஹீரோவாக உருவெடுத்தார்.
ஆக்சன் ஹீரோவாக பல படங்கள் செய்திருந்தாலும் மக்கள் மனதில் என்றும் நிலைத்திருப்பது என்னவோ ”கேப்டன் பிரபாகரன்” தான். அதனாலேயே மக்கள் இவரை கேப்டன் என்று அழைக்க தொடங்கினர். விஜயகாந்தின் திரை உலகில் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்படுத்திய கேப்டன் பிரபாகரன் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 22 தேதி ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் ஆர்.கே.செல்வமணி ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சுவாரசிய சம்பவங்களை பகிர்ந்துள்ளார். அதில்,” இந்தப் படத்திற்காக தென்னிந்தியா முழுவதும் சுமார் 40,000 கிலோ மீட்டர் பயணித்தேன். ஏனென்றால் படத்தின் கதை களம் காடுகளில் நடப்பது போல் இருப்பதால் அதற்கான லொகேஷன் தேடுவது கடினமாக இருந்தது. இந்த படம் தொடங்குவதற்கு முன் ஏகப்பட்ட விபத்துக்கள் ஏற்பட்டது. ஒருமுறை கார் ஒன்று விபத்துக்குள்ளானது”.
”அதில் டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முதல் நாள் காலையில் அதில் விஜயகாந்த் சார் அதில் பயணிக்க இருந்தார். நல்லவேளை அவர் அந்த காரில் பயணிக்கவில்லை, நூலிலையில் உயிர்தப்பினார் என்றுதான் சொல்ல வேண்டும். விஜயகாந்தின் நண்பர் இப்ராஹிம் ராவுத்தர் மிகவும் சென்டிமென்டான ஆளு. இந்த மாதிரி விபத்துகள் ஏற்படுவதை பார்த்து சூட்டிங் நிறுத்த சொல்லிவிட்டார்”.
”அப்புறம் விஜயகாந்த் சார் ஏதோ சமாளிச்சு மீண்டும் சூட்டிங் நடத்தப்பட்டது. அதேபோல சண்டைக் காட்சிகளில் மன்சூர் அலிகான் அடிக்க சொன்னால் உண்மையாகவே அடித்து விடுவார். விஜயகாந்த் சாரின் கையை குறைந்தபட்சம் பத்து முறை அடித்து இறக்கியுள்ளார். முகத்தில் அடித்துள்ளார். இதனால் மன்சூர் அலிகான் உடன் நடிக்கும் ஆர்டிஸ்ட் உடன் எப்போதும் பிரச்சினை வரும்”.
”என்னைப் பொருத்தவரைக்கும் மன்சூர் அலிகான் ரொம்ப நல்ல மனிதர். உண்மையில் மிகச் சிறந்த நடிகர் மன்சூர் அலிகான்”. என்று ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவங்களை பகிர்ந்துள்ளார் இயக்குனர் ஆர்.கே.செல்வமணி.
Parasakthi: அமரன் படத்திற்கு பின் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நடிக்க தொடங்கினார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மட்டுமில்லாமல்...
STR49: வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க சிம்பு நடிப்பில் ஒரு படம் உருவாகவுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது....
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான குட் பேட் அக்லி சூப்பர் ஹிட் அடித்ததால் அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக்கே...
Goundamani: கோவையை சேர்ந்த சுப்பிரமணியன் கருப்பையா நாடகங்களில் நடித்து வந்தார். எப்படியாவது சினிமாவில் சேர்ந்து நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டார். கருப்பு...
TVK Vijay: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மக்களை சந்திப்பதற்காக கரூருக்கு சென்றிருந்தபோது அங்கு நடந்த அசம்பாவிதமான சம்பவம் அவரை...