
latest news
தகர டப்பா டூ நாளைய தலைவன்.. இன்ச் இன்ச்சா விஜயை செதுக்கினேன்.. மனம் திறந்த எஸ்.ஏ சந்திரசேகர்..
Published on
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். இன்றைய தேதியில் ரஜினி,கமலை விட தன்னுடைய பிசினஸை அதிகமாக வைத்துள்ளார். அவருடைய முன்னேற்றம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. ஏற்கனவே ரஜினியின் இடத்தை தாண்டிய விஜய் அடுத்த சில வருடங்களுக்கு தமிழ் சினிமாவை ரூல் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென்று அரசியல் களத்தில் இறங்கப் போவதாக அறிவித்தார்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து எதிர்வரும் 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலில் போட்டியிட முனைப்போடு செயல்பட்டு வருகிறார். கட்சியை ஆரம்பித்து முதல் மாநாட்டை விக்கிரபாண்டியில் வெற்றிகரமாக நடத்திய விஜய் அடுத்ததாக தனது இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் இன்று நடந்தது. இந்நிலையில் எச்.வினோத் இயக்கத்தில் தற்போது நடித்து முடித்துள்ள ”ஜனநாயகன்” படம்தான் என்னுடைய கடைசி படம் என்று அறிக்கை வெளியிட்ட அறிவித்தார்.
அதிலிருந்து தமிழ் திரையுலகமும், விஜய் ரசிகர்களும் சோகத்தில் மூழ்கினர். ஆனால் ஒரு காலத்தில் இந்த மூஞ்சியெல்லாம் யார் பார்ப்பார்கள்? என்று விமர்சனம் இருந்தது. விஜயின் முதல் திரைப்படம் அவரின் முகத்தையும் உருவத்தையும் வைத்து இது தகர டப்பா மூஞ்சி டா என பலரும் கேலி செய்தார்கள். ஆனால் அவற்றையெல்லாம் கண்டு கொள்ளாத விஜய் தன்னை கேலி செய்தவர்களை தளபதி என்று பெயர் சொல்லும் அளவிற்கு உயர்ந்தார். இன்று அவரின் வளர்ச்சியை பார்த்து பல நாளிதழ்களில் பக்கம் பக்கமாக பாராட்டி எழுதுகிறார்கள்.
இந்நிலையில் மூத்த இயக்குனரும் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் தன் மகனின் வளர்ச்சி குறித்து மனம் திறந்துள்ளார் அதில்,”ஆரம்ப காலகட்டத்தில் விஜயை வைத்து படம் இயக்குவதற்காக நான் ஒவ்வொரு இயக்குனரிடமும் சென்று கேட்டேன். எல்லாரும் முடியாது என சொல்லிவிட்டார்கள். அதனால் நானே என் மகனை வைத்து படம் எடுத்தேன். அன்று ரிஜெக்ட் ஆனவர் இன்று டாப் ஹீரோ நாளைய தலைவன்”. என்று கூறியிருக்கிறார்.
என்னதான் விஜய்க்கும் அவரது தந்தைக்கும் தனிப்பட்ட முறையில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அதை எங்கேயுமே இருவர்களும் வெளிகாட்டியதும் இல்லை, எஸ்.ஏ.சந்திரசேகர் எங்கேயுமே தன் மகனை விட்டுக் கொடுத்து பேசியதும் இல்லை.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் தமிழ் ஏற்கனவே 8 சீசன்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. முதல் 7 சீசனை கமல்ஹாசன்...
Bison: நடிகர் விக்ரமின் மகனும் நடிகருமான துருவ் விக்ரம் நடிப்பில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் பைசன். இந்த படம் அக்டோபர்...
Simbu-Dhanush: தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜித் வரிசையில் அடுத்த இரட்டை போட்டியாளர்களாக பார்க்கப்பட்டவர்கள் சிம்புவும் தனுஷும். சிம்பு குழந்தை...
SMS: கடந்த 2009 ஆம் ஆண்டு ராஜேஷ் இயக்கத்தில் வெளியான திரைப்படம்தான் சிவா மனசுல சக்தி. இந்தப் படத்தில் ஜீவா நாயகனாக...
கோமாளி படம் மூலம் இயக்குனராக களமிறங்கி முதல் படத்திலேயே ஹிட் கொடுத்தவர் பிரதீப் ரங்கநாதன். அந்த படத்தின் இறுதியில் ஒரு காட்சியில்...