
Cinema News
அட்ரஸ் இல்லாத லெட்டருக்கு நான் ஏன் பதில் போடணும்!.. விஜய்க்கு பதில் சொன்ன கமல்!…
TVK Maanadu: நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கியதால் அரசியல்வாதியாக மாறிவிட்டார். இதை பலரும் எதிர்பார்க்கவில்லை. எம்ஜிஆருக்கு பின் சினிமாவுக்கு வந்து ஓரளவுக்கு மக்கள் மனதில் இடம் பிடித்தவர் விஜயகாந்த் மட்டுமே. விஜயகாந்துக்கு முன்பே ‘நான் அரசியலுக்கு வருவேன்’ என பல வருடங்கள் சொல்லி வந்தவர் ரஜினி.
ஆனால் அவர் பின் வாங்கி விட்டார். அதேநேரம் ரஜினியின் நெருங்கிய நண்பர் கமல் மக்கள் நீதி மையம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி அரசியலுக்கு வந்தார். ஆனால் அரசியலில் அவரால் சாதிக்க முடியவில்லை. கோவையில் ஒரு தொகுதியில் கமல் போட்டியிட்டார். ஆனால் அதிலேயே அவரால் வெற்றி பெற முடியவில்லை.
துவக்கத்தில் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வந்த கமல்ஹாசன் திமுக ஆட்சிக்கு வந்தபின் அந்த கட்சியோடு நெருக்கமானார். அதன் காரணமாக அவருக்கு மேலவை எம்பி பதவியும் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநாடு இன்று மதுரையில் நடந்தது. அந்த மேடையில் மிகவும் ஆக்ரோஷமாக பேசினார் விஜய். வழக்கம்போல் திமுகவை கடுமையாக விமர்சித்தார். ‘2026 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தாவெக போட்டியிடும். எல்லா தொகுதிகளும் நான்தான் போட்டியாளர் என நினைத்து ஓட்டு போடுங்கள்’ என அவர் பேசினார்.

மேலும் ‘நான் ஒன்றும் சினிமாவிலிருந்து ஓய்வு பெற்று எதை செய்வது என தெரியாமல் ஆதாயத்திற்காக அரசியலுக்கு வரவில்லை. கடந்த 30 வருடங்களாக மக்கள் என் மீது காட்டிய அன்புக்கு நன்றி கடன் பட்டிருக்கிறேன். அந்த திருப்பி செலுத்தவே அரசியலுக்கு வந்திருக்கிறேன்’ என பேசினார்.
இந்நிலையில் விஜய் பேசியது பற்றி விமான நிலையத்தில் நடிகர் கமலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு பதில் சொன்ன கமல் ‘அவர் யார் பெயரையும் குறிப்பிட்டு சொல்லவில்லையே.. அட்ரஸ் இல்லாத லெட்டருக்கு நான் எப்படி பதில் எழுத முடியும்?’ என கேள்வி கேட்டார். மேலும் விஜய் என் தம்பி மாதிரி’ என சொல்லிவிட்டு போய்விட்டார்.