">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
விஜயபாஸ்கர் எங்க ஆளையே காணோம்? இதிலும் அரசியலா? இதுதான் காரணமா?
கொரோனா தொற்று பூதாகரமாகி தமிழகத்தில் பரவ துவங்கிய முதல் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தினமும் செய்தியாளர்களை சந்தித்து பாதிக்கப்பட்டோர், தனிமைப்படுத்தப்பட்டோர், சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர் என அப்டேட்டுகளை கூறிவந்தார்.
இதுபோக தனது டிவிட்டர் பக்கத்திலும் தொடர்ந்து கொரோனா அப்டேட்டுகளை பதிவு செய்து வந்தார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக அவரை தொலைக்காட்சிகளில் பார்க்க முடிவதில்லை. டிவிட்டரில் மட்டும் செய்திகளை பகிர்ந்து வருகிறார்.
இதுபற்றி விசாரித்த போது பல தகவல்கள் கிடைத்தனர். கொரோனா விவகாரத்தில் விஜயபாஸ்கரின் நடவடிக்கை மக்களிடையே அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்துள்ளது. எனவே, சமூகவலைத்தளங்களில் கட்சி பேதமில்லாமல் பலரும் அவரை பாராட்டி வந்தனர். நெட்டிசன்களும் அவரை புகழ்ந்து மீம்ஸ்களை உருவாக்கி உலவ விட்டனர். எனவே, கொரோனா விவகாரத்தில் அவர் மட்டுமே நடவடிக்கை எடுத்து வருகிறார் என்கிற தோற்றம் உருவானது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பெயரும் அடிபட்டு போனது.
இந்த தகவலை பழனிச்சாமிக்கு நெருக்கமான அமைச்சர்கள் அவரின் காதில் போட கடுப்பான பழனிச்சாமி, இனிமேல் நீங்கள் செய்தியாளர்களை சந்திக்க வேண்டாம் எனக்கூறிவிட்டதாக விபரம் அறிந்தவர்கள் கூறிவருகிறார்.
அதனால்தான், கடந்த 29ம் தேதி கொரோனா அப்டேட்டை சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் எனக்கூறப்படுகிறது.
மக்கள் முன்பு எப்படி பேசினாலும் அரசியல்வாதிகள் எப்போதும் அரசியல்வாதிகள்தான்!. ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் மக்கள் பணியில் கூட அரசியல் விளையாடுவது ஆபத்தானது என விபரம் அறிந்தவர்கள் கூறி வருகின்றனர்.