
Box Office
லியோ ஸ்கேம் உண்மையா?.. 404 கோடிதான் வசூலா?.. ஐடியா இல்லாத பசங்க…
Leo Vs Coolie: எப்போது ஜெயிலர் விழாவில் ரஜினி காக்கா கழுகு கதை சொன்னாரோ அன்று முதல் விஜய் ரசிகர்களுக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் மோதல் துவங்கிவிட்டது. ஒவ்வொரு முறையும் ரஜினி படங்கள் வெளியாகும் போது அதை விஜய் படத்தின் வசூலோடு ஒப்பிட்டும், ரஜினி படங்களை மோசமாகவும், நெகட்டிவாகவும் விமர்சனம் செய்து டிவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் விஜய் ரசிகர்கள் வன்மத்தை கக்கி வருகிறார்கள். கூலி படம் ரிலீஸ் ஆனபோதும் அப்படத்திற்கு வந்த நெகட்டிவ் விமர்சனங்களுக்கு விஜய் ரசிகர்களே காரணம் என பலரும் சொன்னார்கள்.
லியோ திரைப்படம் 4 நாட்களில் 405 கோடி, 7 நாட்களில் 461 கோடி, படம் வெளியாகி 12 நாட்களில் 540 கோடி வசூல் என அறிவிப்புகளை வெளியிட்டார் அப்படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார். இறுதியாக அப்படம் 600 கோடி வசூல் செய்ததாக சொல்லப்பட்டது. ஆனால் 5 நாட்களில் கூலி படம் 404 கோடி வசூல் செய்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்தது.

அதன்பின் வசூலை பற்றி இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. கடந்த செவ்வாய் கிழமை முதலே படத்தின் வசூல் படுத்து விட்டதாக பலரும் சொல்கிறார்கள். எனவே இதை வைத்து கூலி படத்தை விட லியோ படமே வசூல் அதிகம் என விஜய் ரசிகர்கள் சமூக விரதங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில்தான் லியோ பட தயாரிப்பாளர் லலித்குமார் வருமான வரி தாக்கல் செய்த ரிப்போர்ட் இணையத்தில் கசிந்தது. அதில் லியோ படம் மூலம் தனக்கு 404 கோடி வருமானம் கிடைத்ததாக அவர் குறிப்பிட்டுருந்தார். இதை கையில் எடுத்த ரஜினி ரசிகர்கள் லியோ படம் 404 கோடி மட்டும்தான் வசூல். ஆனால் 600 கோடி என பொய் சொல்லியிருக்கிறார்கள். இது ஸ்கேம் என இன்று காலை முதலே நக்கல் அடித்து வருகின்றனர்.

ஆனால் இதில் இருக்கும் உண்மை என்னவென்றால் லியோ படம் மூலம் அப்படத்தின் தயாரிப்பாளர் லலித்குமாருக்கு கிடைத்த வருமானம் வேறு.. லியோ படத்தின் மொத்த வசூல் வேறு என்பதை ரசிகர்கள் புரிந்து கொள்ளவில்லை. அதாவது லலித்குமாருக்கு கிடைத்தது 404 கோடி. அது இல்லாமல் விநியோகஸ்தர்கள், தியேட்டர அதிபர்களுக்கு கிடைத்த வருமானம் மீதி இருக்கிறது. அதையெல்லாம் சேர்த்துதான் 600 கோடி வசூல் அன்று அப்போது சொன்னார்கள் என்பதை யாரும் புரிந்து கொள்ளவில்லை.