
Cinema News
விஜய் கேப்டனாக முடியாது!.. கூட்டம் வந்தால் ஓட்டு வந்துருமா ?.. வெளுத்து விட்ட பிரபலம்
தமிழ் சினிமாவில் உச்சம் தொட்ட நடிகர் விஜய். நடிகர்கள் ஓரளவுக்கு சினிமாவில் பெயர் எடுத்தவுடன் அடுத்த கட்ட நகர்வாக அரசியலில் பயணம் செய்கிறார்கள். அப்படி எல்லாரும் பயணம் செய்தாலும் ஒரு சிலரே அரசியலில் ஜெயித்து காட்டுகிறார்கள். அந்த வரிசையில் எம்ஜிஆர் வந்தார் முதலமைச்சர் ஆனார்.
அதேபோல விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவரானார். தற்போது விஜய் வந்துள்ளார், இவரும் அவர்களைப் போல ரசிகர் கூட்டம் கொண்டவர் தான். மக்கள் மத்தியில் பிரபலமாகவும் இருக்கிறார். அவர்களைப் போல இவரும் சாதிப்பாரா ?என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார் பிரபல எழுத்தாளர் லியாகத் அலிகான் மேலும் அவர் கூறுகையில் ,
”எம்ஜிஆர் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தார் என்றால் அதில் ஒரு நியாயம், தர்மம் இருக்கிறது. அவரது படங்களில் நல்லது செய்யணும், அள்ளிக் கொடுக்கணும், தாயை மதிக்கணும் இதைத்தான் தாரக மந்திரமாக பயன்படுத்தி இருப்பார். அதேபோல விஜயகாந்தும் இன்றும் புகழப்படுகிறார், பேசப்படுகிறார் என்றால் அவர் மக்களுக்காக வாழ்ந்த நடிகர். ஆனால் இன்று அப்படிப்பட்ட சினிமாக்கள் வருவதில்லை காலங்கள் மாறிப்போச்சு”.

”இன்னைக்கு விஜய் பின்னாடி இளைஞர் கூட்டம் போகுது, ஆனால் மக்கள் மத்தியில் என்ன இருக்கு தெரியுமா? பொது இடத்தில் நடிகன் வந்தாலே கூட்டம் கூட தான் செய்யும் வேடிக்கை பார்க்க தான் செய்வாங்க. இன்னைக்கு சூர்யா அகரம் மூலம் பல மருத்துவர், இன்ஜினியர்களை உருவாக்கியுள்ளார். அவரே கட்சியதும் ஆரம்பிக்காமல் சும்மாதான் இருக்கிறார். ஒன்றுமே செய்யாத விஜய் இவ்வளவு அலப்பறை எதற்கு? என மக்களை கேள்வி கேட்கிறார் அவர்களை ஏமாற்ற முடியாது”.
”விஜயை பார்ப்பதற்கு இன்று கூட்டம் வரும் ஏனென்றால் அவர் ஒரு மாஸ் ஹீரோ. தொடர்ந்து 4 படங்கள் ஹிட் கொடுத்திருக்கிறார். இதுவே நாலு படங்கள் பிளாப் ஆக இருந்தால் எவனும் வந்திருக்க மாட்டான். கூட்டம் வரும் அதனால் ஓட்டு வருமா ? அரசியலுக்கு என்று ஒரு வியூகம் இருக்கிறது. அதை சொல்லுகின்ற ஆள் விஜய் கூட இருக்கிறாரா? இல்லை”.
”ஒரு பிரச்சனை வரும்பொழுது எம்ஜிஆர்,விஜயகாந்த் எல்லாம் களத்தில் நிற்பார்கள். ஆனால் விஜய் இன்று வரை மக்களுக்கான ஒரு போராட்டக் களத்தில் கூட ஈடுபடவில்லை. எனக்குத் தெரிந்து இனி சினிமாவில் இருந்து ஒரு முதலமைச்சர் வருவது கஷ்டம் தான்”. என்று கூறியிருக்கிறார்