
Cinema News
Vijay TVK: கேப்டனும் நீங்களும் ஒன்னா? சிம்பு கேட்குறதுல என்ன தப்பு? விஜயை தாக்கும் பிரபலம்
Vijay TVK: இன்று புதுசாக ஒரு கட்சியை ஆரம்பிக்கிறவர்கள், மத்தியில் ஆளும் கட்சியையும் மாநிலத்தில் ஆளும் கட்சியையும் தாக்குவது சகஜம். ஆனாலும் இன்று திடீரென எம்ஜிஆர் குணம் கொண்ட புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் என்னுடைய அண்ணன், எம்ஜிஆருடன் பழக எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லையே தவிர கேப்டன் விஜயகாந்துடன் பழக வாய்ப்பு கிடைத்தது. அவருடைய இந்த மண் என்று சொல்லும் நீங்கள் ஏன் முதல் மாநாட்டில் சொல்லவில்லை. மதுரை எனும்போது தானே நீங்கள் சொல்கிறீர்கள். கேப்டனுக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்த போது வந்து பார்த்திருக்கலாம்.
ஐந்து நாள் முன்னாடி கூட பிரேமலதா சொன்னார்கள். கேப்டன் எம்ஜிஆரை மானசீக குருவாக ஏற்றுக் கொண்டார். அதனால் எம்ஜிஆர் போட்டோவை நாங்கள் போடுகிறோம். அதைப் போல நீங்களும் கேப்டனை மானசீக குருவாக ஏற்றுக் கொள்கிறேன் என சொல்லுங்கள் .ஆனால் சொல்லவில்லை. சில போஸ்டர்களில் பார்க்கும் பொழுது வைரத்தை இழந்துவிட்டோம். தங்கத்தை இழக்க மாட்டோம் என்பதையெல்லாம் பார்க்க முடிகிறது. என்ன பேசுறீங்க நீங்க? கேப்டனும் நீங்களும் ஒன்னா? சிம்புவே இதை பற்றி சொல்லி இருக்கிறார்.
நிறைய பேட்டிகளில் சொல்லி இருக்கிறார். அவர் பச்சையா ஒருமையில் சொன்னார். அதாவது ‘ஏண்டா டேய் நீங்களும் கேப்டனும் ஒன்னா’ எனக் கேட்டிருக்கிறார். அதனால் திடீரென ஏன் இந்த பாசம் என தெரியவில்லை. இது முழுக்க முழுக்க ஓட்டை சேகரிப்பதற்கான ஒரு யுக்தி தான் என மீசை ராஜேந்திரன் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார். அது மட்டும் அல்ல. அவர் பேசும்போது எல்லாரையும் தாக்கி பேசி இருக்கிறார். குறிப்பாக அங்கிள் ராங் அங்கிள். வாட் அங்கிள் என ஒரு முதலமைச்சரை பேசியிருக்கிறார். இரண்டாம் கட்ட தலைவர் மூன்றாம் கட்டத் தலைவர் அல்லது பொதுச்செயலாளர் என இவர்கள் அந்த மாதிரி பேசலாம்.
ஆனால் எதிர்காலத் தலைவர் என சொல்லிக் கொண்டிருக்கும் நீங்கள் பக்குவமாக பேசுவதை கற்றுக்கொள்ள வேண்டும். என்ன இருந்தாலும் ஸ்டாலின் 50 வருடம் அரசியல் அனுபவம் உள்ளவர். தமிழகத்தை ஆளும் முதல்வர். அவரை நீங்கள் இந்த அளவு தைரியமாக பேசுகிறீர்கள். சினிமாவில் ஏதோ டயலாக் எழுதி பேசுவது போல தான் எங்களுக்கு தோன்றுகிறது .நீங்கள் பேசலாம். ஆனால் அரசியல் பேசுங்கள் .ஆட்சி சரியில்லை என பேசுங்க. அதை விட்டுவிட்டு கிண்டல் பண்ணுவது மாதிரி பேசுவது எங்களுக்கு தவறாக தெரிகிறது.

இட ஒதுக்கீட்டுக்காக இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்காக போராடியவர் அண்ணாதுரை. அவருடைய புகைப்படத்தை பயன்படுத்தும் நீங்கள் என்ன செய்தீர்கள். அதைப்போல எம் ஜி ஆர் நிறைய செய்திருக்கிறார். நீங்கள் ஏதாவது செய்துள்ளீர்களா? அதை விட்டு விட்டு நான் சிங்கம். நான் இப்படித்தான் இருப்பேன். வேட்டையாட மட்டும் தான் வெளியே வருவீங்க. அப்படி சொல்வதை பார்க்கும் பொழுது ஆண் சிங்கம் வேட்டைக்கு போகாது. பெண் சிங்கம் தான் வேட்டைக்கு போகும். நாங்கள் இப்படித்தான் கேள்வி கேட்போம் சும்மா வாய்க்கு வந்ததை எல்லாம் சினிமாவில் பேசும் வசனம் மாதிரி பேசிவிட்டு போலாமா. இதை பார்க்கும் பொழுது வடிவேலு காமெடி தான் ஞாபகத்திற்கு வருகிறது .நானும் ரவுடிதான், நானும் ரவுடிதான் என்பதைப் போல தான் எங்களுக்கு தெரிகிறது என மீசை ராஜேந்திரன் கூறியிருக்கிறார்.