ரேஸர் அஜித்:
எங்கு பார்த்தாலும் சமூக வலைதளங்களில் அஜித்தின் புகைப்படங்கள் வீடியோக்கள் தான் தற்போது வைரலாகி வருகின்றது. ரேஸில் கவனம் செலுத்தி வரும் அஜித் தற்போது மலேசியாவில் நடக்கும் கார் ரேஸில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். உலகளவில் நடக்கும் கார் ரேஸ்களில் தொடர்ந்து கலந்து கொண்டு தனது மோட்டார் ஸ்போர்ட்ஸை இந்தியா முழுக்க பிரபலப்படுத்தி வருகிறார் அஜித்.
எங்கெல்லாம் கார் ரேஸ் நடக்கிறதோ அஜித்துக்காக அங்கு வாழும் தமிழர்களும் அஜித்தை பார்த்து ஆரவாரம் செய்து வருகின்றனர். அவருக்கு ஆதரவாக எப்போதுமே ரசிகர்கள் இருந்து வருகின்றனர். தற்போது மலேசியாவில் நடக்கும் கார் ரேஸில் அஜித் தனது அணியினருடன் கலந்து கொண்டு வருகிறார். அவருக்கு ஆதரவாக மலேசியா வாழ் தமிழர்கள் மைதானத்திற்கு சென்று அஜித்தை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.
ரசிகர்களின் செயல்:
அதை பார்த்த மற்ற அணியினர் அதை ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். ஒரு போட்டியாளருக்கு இவ்வளவு ரசிகர்களா என அனைவருமே அதிசயத்து பார்க்கின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் தான் தெரியும் அஜித்தின் பவர் என்ன என்பது? எங்கு சென்றாலும் அவரை சூழ்ந்து கொண்டு ஆட்டோகிராப் கேட்பது, போட்டோ எடுப்பது என ரசிகர்கள் தொடர்ந்து அஜித்தை பின் தொடர்கிறார்கள்.
இந்த நிலையில் அஜித், ரசிகர்களின் செயலால் டென்ஷனாகி அவருடைய அறிவுரைகளை கூறி இருக்கிறார். அவரை சூழ்ந்து கொண்ட ரசிகர்களில் ஒரு ரசிகரிடம், தயவு செய்து மத்த அணியினரை தொந்தரவு செய்யாதீர்கள். இது உங்களுடைய நற்பெயருக்கு கேடு விளைவிக்கும் வகையில் அமைந்து விடும். என்னுடைய பெயர் மட்டுமல்ல உங்களுடைய பெயரும் கெட்டுப் போய்விடும்.
அன்பான வேண்டுகோள்:
அதனால் அனைவரிடமும் சொல்லுங்கள், எனக்கு ஒவ்வொருவரிடமும் சொல்ல வேண்டும் என்று ஆசை. என் சார்பாக நீங்களே சொல்லி விடுங்கள். தயவுசெய்து மத்த அணியினரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று ஒரு ரசிகரிடம் தனது அன்பான வேண்டுகோளை வைத்துவிட்டு செல்கிறார் அஜித். அதன் பிறகு இன்னொரு ரசிகர்களிடம் நான் சனிக்கிழமை வரை இங்குதான் இருப்பேன்.
ரேஸில் கவனம் செலுத்த வேண்டும். முடிந்ததும் நான் சொன்ன இடத்திற்கு வந்து விடுங்கள். போட்டோ எடுத்துக் கொள்ளலாம் என்றும் பணிவுடன் கேட்டுக் கொண்டிருக்கிறார் அஜித். இந்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அஜித்தின் இந்த அன்பான வேண்டுகோள் பாராட்டையும் பெற்று வருகிறது.
இதோ அந்த வீடியோ லிங்க்: https://www.instagram.com/reel/DR_dMhEjC3k/?igsh=ZG9yZWhwczE2OWF0
