Connect with us
jananayagan

Cinema News

ஜனநாயகன் படத்தில் லோகேஷ்.. அட்லி.. அட அவரும் இருக்காராம்!… செம ட்ரீட் இருக்கு!….

Jananayagan: எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் ஜனநாயகன். கோட் படத்திற்கு பின் விஜய் நடித்திருக்கும் திரைப்படம் இது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே மமிதா பைஜு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும் பாலிவுட் நடிகர் பாபி தியோல் இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார்.

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி அரசியலுக்கு சென்று விட்ட நிலையில் ஜனநாயகன் அவரின் கடைசி படமாக பார்க்கப்படுகிறது. அதே நேரம் 2026 தேர்தல் ரிசல்ட்டை பொறுத்து அவரின் முடிவு மாறும் என்றும் சிலர் சொல்கிறார்கள். அதாவது தேர்தலில் எதிர்பார்த்த அளவுக்கு ஓட்டுக்கள் கிடைத்தால் அரசியலில் தொடர்வார். இல்லையெனில் மீண்டும் சினிமாவில் நடிப்பார் என்கிறார்கள்.

jananayagan
#image_title

தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்து சூப்பர் ஹிட் அடித்த பகவந்த் கேசரி படத்தின் தமிழ் ரீமேக்தான் ஜனநாயகன் என்கிற செய்தியும் ஏற்கனவே வெளியானது. இந்த படத்தின் ரீமேக் உரிமையும் ஜனநாயகன் படக்குழு வாங்கி இருக்கிறது. ஆனால் தமிழில் விஜய்க்கு ஏற்றவாறு எச்.வினோத் நிறைய மாற்றங்களை செய்து விட்டார் எனவும் சொல்கிறார்கள். ஏற்கனவே இப்படத்தின் சில போஸ்டர்களை மட்டும் படக்குழு வெளியிட்டது. இந்த படம் 2026 பொங்கலுக்கு வெளியாவதால் மற்ற பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் விஜய்க்கு நெருக்கமான இயக்குனர்கள் அட்லி, நெல்சன் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் நடித்திருக்கிறார்களாம். ஒரு காட்சியில் விஜயிடம் கேள்விகளைக் கேட்கும் பத்திரிக்கை நிருபர்களாக அவர்கள் மூவரும் நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது.

Continue Reading

More in Cinema News

To Top