
Cinema News
விஜய் பெண் சிங்கமா..? யாருடா விஜயகாந்த்துக்கு தம்பி?.. விளாசும் பிரபலம்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது இரண்டாவது மாநில மாநாட்டை மதுரையில் கோலாகலமாக நடத்தினார். முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் தனது அனல் பறக்கும் பேச்சால் சிக்ஸர் அடித்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டாவது மாநாட்டில் வெறி பிடித்தது போல் கத்தியுள்ளார் என்று பிரபல நடிகர் மீசை ராஜேந்திரன் கூறியுள்ளார். விஜயின் இரண்டாவது மாநாட்டை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார் மேலும் அதில்,
“மாநாட்டில் நான் கேப்டன் தம்பி என்று சொன்ன விஜய். அவர் உடல்நிலை சரியில்லாத போது வந்து பார்த்தாரா? அந்த அன்பும் பாசமும் ஏன் இல்லை? இன்று மக்கள் விஜயகாந்தை தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள். விஜய் அதை பயன்படுத்தி மக்கள் மனதில் இன்னும் ஆழமாக இடம் பிடிக்க வாக்குகளை வாங்க சைக்கலாஜிக்கல் பிளே செய்கிறார். விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாத போது ரஜினிகாந்த், சத்யராஜ், தியாகு என பல நடிகர்கள் வந்து பார்த்தார்கள்”.
”அந்த நேரத்தில் விஜய் எங்கு சென்றார்? கடைசி ஆறு மாதங்கள் தான் விஜயகாந்தை யாரும் பார்க்க முடியாது போல் இருந்தது, அதுவும் இன்பெக்சன் மெடிக்கல் காரணங்களுக்காக மட்டும் தான். ’நான் எம்ஜிஆரோடு பழக வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் எங்கள் அண்ணன் கேப்டனாடு பழக எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அவர் இந்த மதுரை மண்ணைச் சார்ந்தவர்’. அப்படியெல்லாம் சொன்ன இவர். இதை ஏன் முதல் மாநாட்டில் சொல்லவில்லை?

”அங்கு வைக்கப்பட்டுள்ள பேனரில் எம்ஜிஆர் புகைப்படம் இருந்தது. அதற்கு விஜய் கொடுத்த விளக்கம் ’எம்ஜிஆரை எங்கள் குருவாக ஏற்றுக் கொள்கிறோம்’. என்று சொன்னார். அதேபோல விஜயகாந்தையும் உங்கள் குருவாக ஏற்றுக் கொள்ளுங்கள் அதை வெளிப்படையாக பொதுவெளியில் அறிவியுங்கள். வைரத்தை இழந்து விட்டோம், தங்கத்தை இழந்து விடக்கூடாது. அப்படின்னு எமோஷனல் ட்ராமா பண்ணிக்கிட்டு இருக்காங்க”.
”இந்த திடீர் பாசத்திற்கு காரணம் ஒட்டு பாலிடிக்ஸ் மட்டுமே. போற போக்கில் நான் மற்ற நடிகர்கள் போல் வாரேன் என்று சொல்லாமல் வந்து விட்டேன். என்று சொன்னது ரஜினியை மறைமுகமாக தாக்கியது போல் இருந்தது. கட்சி ஆரம்பித்து இந்த பத்து மாத காலத்தில் மக்களுக்காக நீங்க என்ன செஞ்சீங்க? நான் சிங்கம் வேட்டையாட மட்டும்தான் வெளியே வருவேன். வேடிக்கை பார்க்க வரமாட்டன் அப்படின்னு சொன்னாரு”.
” லாஜிக் படி ஆண் சிங்கம் வேட்டைக்கே போகாது, பெண் சிங்கம் தான் வேட்டைக்கு போகும். அப்போ விஜய் பெண் சிங்கமா? அஜித் குமார் கொலைக்கு குரல் கொடுத்த நீங்க, ஆணவ கொலை செய்த கவினுக்கு குரல் கொடுத்தீங்களா? இன்னும் அரசியலுக்கான மெச்சூரிட்டி விஜயிடம் இல்லை”. என்று சரமாரியாக விஜயை தாக்கி பேசி உள்ளார்.