
Cinema News
ஜனநாயகன் படத்தில் புஸ்ஸி ஆனந்த்!… ட்விஸ்ட் மேல ட்விஸ்ட் கொடுக்குறாங்களே!…
Jananayagan: நடிகர் விஜய் எப்போது தமிழக வெற்றிக்கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கினாரோ அப்போது முதலே பிரபலமானவர்தான் புஸ்ஸி ஆனந்த். தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் பதவியையும் இவருக்கு கொடுத்தார் விஜய். விஜயின் வலதுகரமாகவும் விஜயின் நம்பிக்கைக்குரியவராகவும் இருக்கும் ஆனந்த் கட்சி தொடர்பான வேலைகளை செய்வது, மன்ற நிர்வாகிகளை ஒருங்கிணைப்பது, ரசிகர்களை ஒருங்கிணைப்பது என எல்லாவற்றையும் செய்பவர் இவர்தான்
விக்கிரவாண்டியில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நடந்தபோது அதற்கான ஏற்பாடுகளை ஆனந்தே செய்தார். சமீபத்தில் மதுரையில் நடந்த மாநாடும் இவரது மேற்பார்வையில்தான் நடந்தது. ‘விஜயை காக்கா பிடிப்பதற்காக இவர் பல விஷயங்களை செய்கிறார். ஆனால் விஜய் இவரை மட்டுமே நம்புகிறார்’ என விஜய்யின் அப்பா எஸ்எஸ்சி ஊடகங்களில் பேட்டி எல்லாம் கொடுத்தார்.
ஒருபக்கம் விஜயை சந்திக்க இவரின் அனுமதி கேட்க வேண்டி இருக்கிறது.. இவரைத் தாண்டி விஜயை நெருங்க முடியவில்லை.. இவர் தனக்கு தேவையான நபர்களுக்கு மட்டும் பணம் வாங்கிக் கொண்டு பதவிகளை கொடுக்கிறார் என்றெல்லாம் தாடி பாலாஜி போன்றவர்கள் புகார் சொன்னார்கள். ஆனாலும் விஜய் இவரை நம்புகிறார்.

ஒருமுறை கட்சி நிர்வாகிகளிடம் பேசும் போது ‘இனிமேல் தலைவரை(விஜய்) பெயர் சொல்லி அழைக்கக்கூடாது. தளபதி என்று மட்டுமே அழைக்க வேண்டும்’ என இவர் கூறியது ட்ரோலில் சிக்கியது. ஆனந்த் புதுச்சேரியை சேர்ந்தவர். 2006ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் புஸ்ஸி (Bussy) என்கிற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதுமுதல் இவரின் பெயர் புஸ்ஸி ஆனந்த் என மாறியது. ஆனால் 2011 மற்றும் 2016 ஆகிய இரு தேர்தல்களிலும் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதன்பின் விஜயின் மக்கள் மன்றத்தில் தன்னை இணைத்துக் கொண்டு இப்போது தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளராகவும் மாறி இருக்கிறார்.
இந்நிலையில் நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்தில் ஒரு முக்கிய காட்சியில் ஆனந்தை நடிக்க வைத்திருக்கிறாராம் விஜய். ஏற்கனவே இயக்குனர்கள் அட்லி, நெல்சன் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் ஒரு காட்சியில் நடித்திருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் புஸி ஆனந்தும் நடித்திருக்கிறார் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.