Connect with us
jana

Cinema News

Jananayagan: ‘ஜனநாயகன்’ படத்தில் எம்ஜிஆரா? அதுமட்டுமில்லாமல் இன்னொரு கேமியோவும் இருக்காம்

Jananayagan: விஜய் தற்போது அவரது கடைசி படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அந்தப் படத்தை எச்.வினோத் இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இவர்களுடன் பிரியாமணி, நரேன், மமிதா பைஜூ போன்ற முக்கிய நடிகர்களும் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். படம் அடுத்த வருடம் ரிலீஸாக இருக்கின்றது. படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர்.

அதுவும் இந்தியாவில் இல்லையாம். வெளி நாட்டில் படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். பொதுவாக பெரிய நடிகர்களின் படங்கள் இசை வெளியீட்டு விழா என்றால் பல பிரபலங்கள் கலந்துகொண்டு சிறப்பிப்பார்கள். அந்த வகையில் ஜனநாயகன் திரைப்படம் விஜய்க்கு கடைசி படம் என்பதால் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு ரஜினி, கமல், அஜித், சூர்யா என இவர்கள் அழைக்கப்படுகிறார்கள் என்ற ஒரு செய்தி பரவி வருகிறது.

இது எந்தளவுக்கு சாத்தியப்படும் என்பது தெரியவில்லை. ஆனால் இவர்கள் எல்லாருமே விஜய்க்கு போட்டி நடிகர்கள் என்பதால் அந்த விழாவில் விஜய்தான் ஹீரோவாக தெரிவாரே தவிற இவர்கள் இல்லை. அதனால் இது சாத்தியப்படாத ஒன்று என்றும் கூறி வருகிறார்கள். இந்தப் படத்தில் விஜய் தைரியமாக அரசியல் வசனங்கள் பேசவும் வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

ஏற்கனவே மாநாட்டில் நேரடியாகவே அவருடைய எதிரியாக கருதப்படும் கட்சித்தலைவர்களை உண்டு இல்லைனு செய்துவிட்டார். இதில் படத்தில் சொல்லவா வேண்டும்? இந்த நிலையில் ஜனநாயகன் படத்தில் எம்ஜிஆரையும் காட்ட இருக்கிறார்களாம். ஜன நாயகன் படத்தை பொறுத்தவரைக்கும் பகவந்த் கேசரி படத்தின் ரீமேக். அந்தப் படத்தின் அறிமுக காட்சியில் ஜெயிலுக்குள் பாலகிருஷ்ணா இருப்பதை போல ஆரம்பிப்பார்கள். அதுவும் சுவற்றில் சிங்கத்தின் புகைப்படம் இருக்கும். அந்த புகைப்படத்தில் இருந்து பாலகிருஷ்ணாவை ஃபோக்கஸ் செய்வது போல அறிமுக காட்சி இருக்குமாம்.

Aniruth

அதை போல் ஜன நாயகன் படத்தில் சிங்கத்திற்கு பதிலாக ஜெயில் சிறையில் எம்ஜிஆரின் ஓவியம் வரையப்பட்டிருக்குமாம். அதனால் எம்ஜிஆர் புகைப்படத்தில் இருந்து விஜயை காட்டுவது போல காட்சி ஆரம்பமாகும் என்று சொல்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் அனிருத்தும் இந்தப் படத்தில் தோன்றி ஒரு பாடலில் ஆடி பாடியிருக்கிறாராம்.

Continue Reading

More in Cinema News

To Top