Connect with us
ajith

Cinema News

அந்த ஹாலிவுட் படத்தின் ரீமேக் உரிமையை வாங்கிய அஜித்?!.. தரமான சம்பவம் இருக்கு!..

F1 Ajith: நடிகர் அஜித்துக்கு சிறு வயது முதலே பைக் மற்றும் கார் ஓட்டுவதில் அலாதி பிரியம் ஏற்பட்டது. அவரின் டீன் ஏஜ் வயதில் கூட மற்ற இளைஞர்களை போல ஊர் சுற்றாமல் தன் வீட்டின் அருகில் இருக்கும் பைக் பட்டறையுல் அதிக நேரத்தை செலவழிப்பாராம். அவர் முதல் முதலாக தமிழில் ஹீரோவாக நடித்த அமராவதி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது கூட அந்த பைக் பட்டறையில்தான்.

அந்த படத்திற்கு அவர் கேட்ட சம்பளம் 40 ஆயிரம் ரூபாய். எதற்கு எனில் அந்த சம்பளத்தில் தன்னுடைய முதல் பைக்கை வாங்கினார் அஜித். சினிமாவில் நடிப்பது தொழில் என்றாலும் பைக் ஓட்டுவது, பைக் ரேஸில் கலந்து கொள்வது அவரின் பேஷனாக இருந்தது. அப்படி ரேஸ்களில் கலந்து கொண்டபோது விபத்து நடந்து பலமுறை அவருக்கு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டது.

Ajith1
Ajith1

திருமணத்திற்கு பின் பைக் ரேஸில் கலந்து கொள்வதை நிறுத்தினார் அஜித். அதன்பின் கார் ரேஸில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. கடந்த சில வருடங்களாகவே கார் ரேஸ்களில் கலந்துகொண்டு வருகிறார். துபாயில் துவங்கிய ரேஸ் இன்னமும் முடியவில்லை. பல நாடுகளிலிலும் ரேஸ் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

f1
f1

சில நாட்களுக்கு முன் ஒரு ஆங்கில ஊடகம் ஒன்றில் பேசிய அஜித் ஹாலிவுட்டில் வெளிவந்த F1 போன்ற படங்களில் நடிக்க ஆசை இருக்கிறது என கூறியிருந்தார் தற்போது F1 படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா வாங்கியிருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது. F1 திரைப்படம் ஃபார்முலா ஒன் என்கிற கார் ரேஸ் சம்பந்தப்பட்ட கதை. இந்த படத்தில் ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் ஹீரோவாக நடித்திருந்தார்.

சுரேஷ் சந்திரா இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கி இருப்பதால் இந்த படத்தை தமிழில் எடுக்க அஜித் ஆசைப்படுவதாக கருதப்படுகிறது. ஆதிக் படத்திற்கு பின் F1 படத்தின் தமிழ் ரீமேக்கில் அஜித் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top