
Cinema News
அடேங்கப்பா.. விஜய்யின் மனைவி சொத்து மதிப்பு இவ்வளவா?.. வாயை பிளக்க வைக்கும் விவரம்..
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். எச். வினோத் இயக்கத்தில் ’ஜனநாயகன்’ படத்தில் நடித்து வருகிறார். இதனை அடுத்து அரசியலில் தொடர்ந்து கவனம் செலுத்த இருக்கிறார். தமிழ் திரையுலகில் உட்சத்தில் இருக்கும் ஒரு நடிகர் அதாவது சுமார் 200 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் ஒரு நடிகர் சினிமாவே வேண்டாம் என்று உதறி மக்களுக்காக பாடுபட போகிறேன் என்று கிளம்பியுள்ளார்.
முதற்கட்டமாக விக்கிரவாண்டியில் மாபெரும் மாநில மாநாட்டை நடத்தி தன்னுடைய வருகையை அறிவித்தார். அதன் பிறகு சமீபத்தில் மதுரையில் நடந்த இரண்டாவது மாநில மாநாட்டில் அனல் பறக்க பேசி அரசியல் வருகைக்கான நோக்கத்தை பதிவு செய்தார். தொடர்ந்து 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலில் போட்டியிட முனைப்போடு செயல்பட்டு வருகிறார். அப்படி இருக்கையில் தற்போது அவரின் மனைவி சங்கீதாவின் சொத்து மதிப்பு விவரம் வெளியாகி இருக்கிறது.
இலங்கை தமிழரான சங்கீதா விஜயின் தீவிர ரசிகர். அவரை காதலித்து 1999 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும் திவ்யா சாஷா என்ற மகளும் உள்ளனர். சங்கீதா ஒரு இந்து குடும்பத்தை சார்ந்தவர், விஜய் ஒரு கிறிஸ்தவ குடும்பத்தை சார்ந்தவர் மத வேறுபாடு இருந்தாலும் இருவரும் ஒன்றுபட்ட வாழ்க்கை வாழ்ந்து கொண்டு வருகின்றனர். இன்று வரை அன்பாகவும், எளிமையாகவும் குடும்ப வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

சங்கீதாவின் தந்தை இங்கிலாந்தில் உள்ள மிகப்பெரிய தொழில் அதிபர்களில் ஒருவர். பிறக்கும்போது கோடீஸ்வரராக இருந்தாலும் தற்போது சங்கீதா விஜயின் சொத்து மதிப்பு வெளியாகி கேட்போரின் வாயை பிளக்க வைகிறது. நடிகர் விஜய் அரசியலில் பிசியாக இருக்கும் நிலையில் அவரது மனைவி சங்கீதா மகள் படிப்பிற்காக வெளிநாட்டில் தங்கி வருகிறார்.
இலங்கை வம்சாவளி கொண்ட லண்டன் தொழிலாளரின் மகள் சங்கீதாவின் சொத்து மதிப்பு சுமார் 400 கோடி என தகவல் வெளிவந்துள்ளது. சங்கீதாவிற்கே இவ்வளவு கோடி சொத்து இருக்கின்ற நிலையில் விஜய்க்கு எவ்வளவு இருக்கும் என்று ரசிகர்கள் கணக்கு போட ஆரம்பித்து விட்டனர்.