
Cinema News
Kamal: அந்த நடிகை மேல் லவ் இருந்துச்சு.. பப்ளிக்ல போட்டு உடைச்ச ஸ்ருதிஹாசன்
Kamal: தமிழ் சினிமாவில் மிகவும் போற்றத்தக்க நடிகராக அறியப்படுபவர் நடிகர் கமல்ஹாசன். தற்போது பாராளுமன்ற எம்பியாக இருக்கிறார். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் தக் லைஃப். அந்தப் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. கமல் மணிரத்னம் கூட்டணியில் உருவான நாயகன் திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
அதனால் மீண்டும் அவர்கள் தக் லைஃப் படத்தின் மூலம் இணைகிறார்கள் என்று அறிவிப்பு வெளியானதுமே ரசிகர்களுக்கு ஒரே குஷி. மீண்டும் ஒரு பெரிய அளவில் வேறு மாதிரியான படத்தை எதிர்பார்க்கலாம் என ஆர்வத்துடன் காத்திருந்தார்கள். ஆனால் படம் வெளியாகி மணிரத்னம் இயக்கத்தில் இப்படி ஒரு படமா என்று அதிர்ச்சியாகிவிட்டனர் ரசிகர்கள்.
அடுத்து கமல் அன்பறிவு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கு இடையில்தான் அவர் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் கமலின் லவ் ஸ்டோரியை பற்றி அவரது மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். கமல் என்றால் ஆரம்பத்தில் இருந்து காதல் சர்ச்சையில் சிக்குபவர் என அனைவருக்கும் தெரியும்.
அந்த காலத்தில் கமலுடன் சேர்ந்து நடிக்கவே பல நடிகைகள் தயங்குவார்கள். ஏனெனில் அவர் படத்தில் லிப் லாக் காட்சிகள் கண்டிப்பாக இடம்பெறும். இந்த நிலையில் கமல் பெங்காலி மொழி கற்றதற்கு ஒரு நடிகையின் மீது இருந்த லவ் தான் காரணம் என ஸ்ருதிஹாசன் கூறியிருக்கிறார். சினிமாவில் பல மொழிகளை கற்று அறிந்தவர் கமல். குறிப்பாக பெங்காலி மொழியும் அவருக்கு தெரியும். ஆனால் பெங்காலி மொழி கற்றதற்கு பெங்காலி நடிகை அபர்ணா சென் மீது கமலுக்கு இருந்த லவ் தான் காரணம் என ஸ்ருதிஹாசன் கூறியிருக்கிறார்.

அபர்ணா சென்னை இம்ப்ரஸ் செய்யவே கமல் பெங்காலி மொழியை கற்றாராம். அதனால்தான் ஹேராம் படத்தில் கூட ராணி முகர்ஜியின் கேரக்டர் பெயர் அபர்ணா என வைத்ததாகவும் ஸ்ருதிஹாசன் கூறியிருக்கிறார்.