Connect with us
viji

Cinema News

புஷ்பாலாம் ஒரு படமா? கேப்டன் பிரபாகரன் பார்த்து தெரிஞ்சுக்கணும்.. பளார்ன்னு அடித்த இயக்குனர்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் என இரு பெரும் இமயங்கள் ஆட்சி செய்து கொண்டிருந்த காலத்தில் அவர்களுக்கு சமமான ரசிகர் படைகளை கொண்டிருந்தவர் விஜயகாந்த். இவரின் திரைப்படங்களில் அதிரடி ஆக்சன் காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது.

அப்படி ஆக்ஷனால் தன்னுடைய ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்த திரைப்படம் ”கேப்டன் பிரபாகரன்”. 1991-ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் அவரின் திரைப்பயணத்தில் ஒரு மயில்கல் என்றே சொல்லலாம். ஏனென்றால் இது விஜயகாந்தின் 100வது படம். தமிழ் சினிமாவைப் பொறுத்த வரைக்கும் எந்த ஒரு நடிகருக்கும் நூறாவது படம் என்பது எதிர்ப்பார்த்த வெற்றியை பெற தவறிய படங்களாக இருந்தது. ஆனால் அதையெல்லாம் தவிடுபொடியாக்கி கேப்டன் பிரபாகரன் திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது.

இதனை அடுத்து தற்போது இந்த படம் 4k தொழில்நுட்பத்தில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. விஜயகாந்தின் ரசிகர்கள் அன்று எப்படி கொண்டாடினார்களோ அதைப்போல இன்றும் கொண்டாடி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றன. அந்த வகையில் இந்தப் படத்திற்கான இரண்டாம் பாகம் தயாரிக்க வேண்டும் என்று விஜயகாந்த் ரசிகர்கள் இயக்குனர் ஆர்கே செல்வமணி இடம் வேண்டுகோளும் வைத்துள்ளனர்.

இதைப் பற்றி அவர் கூறியது, ” விஜயகாந்தின் ஆன்மா கேப்டன் பிரபாகரன் 2 இயக்கச் சொல்கிறது” என்று சொல்லியிருந்தார். அந்த கதாபாத்திரத்திற்கான நடிகரை தேர்ந்தெடுப்பது மிகவும் சவாலானது என்றும் அதற்குரிய கம்பீரம் தோற்றம் பொருத்தமான நடிகர் வேணடும். அப்படிப்பட்ட நடிகரை தேடி வருவதாக சொல்லி இருந்தார். இந்நிலையில் இந்த படத்தைப் பார்த்த இயக்குனர் பேரரசு முதல்ல சினிமாவுல ஹீரோ யாரு? வில்லன் யாருன்னு? தெரிஞ்சுக்கோங்க என்று கூறியுள்ளார்.

மேலும் அவர்,” கேப்டன் பிரபாகரன் படத்தில் சந்தன மரம் கடத்துபவர்கள் வில்லன், ஆனால் புஷ்பா படத்தில் சந்தன கடத்தல் செய்கிறவர் தான் ஹீரோ. இப்போது இருக்கும் சினிமாவில் போதை பொருள் கடத்துபவர்கள், ஆயுதம் கடத்துபவர்கள் தான் ஹீரோ. கேப்டன் பிரபாகரன் படத்தை எல்லோருக்கும் போட்டு காட்ட வேண்டும், ஏனென்றால் அப்பொழுதுதான் ஹீரோ என்றால் யார்? வில்லன் என்றால் யார்? என்று இப்போது உள்ள இயக்குனர்கள் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்”. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

author avatar
SATHISH G
சதீஷ் பி.இ. பட்டதாரியான இவர் 3 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 2 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top