Connect with us
mansoor

Cinema News

எல்லோரும் நடிகைகளை கொண்டு வந்தாங்க, ஆனா கேப்டன் செஞ்சது!.. மன்சூர் அலிகான் எமோஷனல் ஷேரிங்

தமிழ்நாடு போற்றும் மாபெரும் தலைவர்களில் ஒருவர் விஜயகாந்த். திரைத் துறையில் ரஜினி,கமல் என இருபெரும் ஆளுமைகளுக்கு நடுவில் தனக்கென தனி ஒரு இடத்தை பிடித்து சிம்மாசனம் போட்டு உட்கார்ந்தவர் விஜயகாந்த். தமிழ்நாட்டுக்கே உரிய கருப்பு நிறம், கணீர் குரல் என கம்பீரமான தோற்றத்துடன் தென்னக மக்களின் சூப்பர் ஸ்டாராக திரையில் கலக்கினார். பின்னர் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஆக்சன் ஹீரோவாக வலம் வந்தார்.


ஹிட் நடிகராக உயர்ந்தால் அவருக்கு தமிழ் மட்டுமின்றி மற்ற மொழி திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அப்படி விஜயகாந்த் உச்சத்தில் இருக்கும்போது அவரை தேடி வந்த வேற்று மொழி படங்களை எல்லாம் தவிர்த்தார். தமிழைத் தவிர வேறு எந்த மொழியிலும் நடித்திராத சில நடிகர்களில் விஜயகாந்த்தும் ஒருவர். விஜயகாந்த் போல உதவி செய்யும் நபர் திரையுலகத்தில் வேறு யாரும் கிடையாது. உதவி என்று தேடி வந்தவருக்கும் உதவுவார்.

உதவி தேவைப்படுவோருக்கும் ஓடி சென்று உதவ கூடியவர். அதனாலயே இவருக்கு மக்களின் ஆதரவு கிடைத்தது. அதன் காரணமாக அரசியலில் அடுத்த எம்.ஜி.ஆர் போல வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் உடல் நலக்குறைவால் துவண்டு போனார். பின்னர் 2023 ஆம் ஆண்டு இந்த மண்ணுலகை விட்டு மறைந்தார் விஜயகாந்த். அவரின் இறுதி சடங்கில் பங்கேற்றார் ரஜினிகாந்த் விஜயகாந்த் போல ஒரு நல்ல மனிதர் பார்க்கவே முடியாது என்றும் அவர் தமிழ்நாட்டு முதலமைச்சர் ஆகாது தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைத்த சாபம் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் விஜயகாந்தின் தீவிர விஸ்வாசியான மன்சூர் அலிகான் அவரைப் பற்றி நெகிழ்ச்சியான விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். அதில்,” உலகத்தில் ஒரே ஒரு புரூஸ்லி, ஒரே ஒரு ஜாக்கிஜான் தான். அது போல நம்ம இந்தியாவில் ஒரே ஒரு விஜயகாந்த் தான். திரைத்துறையில் அவர் நூற்றுக்கணக்கான கலைஞர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார். மற்ற கதாநாயகன்கள், இயக்குனர்கள் வெறும் கதாநாயகிகளை மட்டும்தான் அறிமுகப்படுத்துவாங்க”.

”ஆனால் விஜயகாந்த் ஐயா என்னை போன்ற வில்லன், கேரக்டர் நடிகர்கள், இயக்குனர்கள், எடிட்டர், சண்டைக்காட்சி நிபுணர்கள், ஒளிப்பதிவாளர்கள் என அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களையும் அறிமுகப்படுத்துவதில் முதன்மையாக இருந்தார்”. என்று எமோஷனலாக பகிர்ந்துள்ளார்.

Continue Reading

More in Cinema News

To Top