Connect with us
vijayakanth

Cinema News

ரீ-ரிலீஸில் வசூல் வேட்டை நடத்தும் கேப்டன் பிரபாகரன்.. ஐந்தாம் நாள் கலெக்சன் ரிப்போர்ட்..

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் உருவான திரைப்படம் கேப்டன் பிரபாகரன். தமிழ் சினிமாவில் எந்த ஒரு நடிகருக்கும் நூறாவது படம் என்பது தோல்வி படமாகவே அமைந்தது. ஓரளவுக்கு பெயர் சொல்லும் அளவிற்கு கூட வெற்றி பெறவில்லை. ஆனால் விஜயகாந்தின் நூறாவது படமான கேப்டன் பிரபாகரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று அவருக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது.

அதுவரை 9 படங்கள் தொடர் தோல்வி கொடுத்து வந்த விஜயகாந்திற்கு கேப்டன் பிரபாகரன் திரைப்படம் மாபெரும் வெற்றி கொடுத்து திரைப்பயணத்தில் அவரை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி சென்றது. விஜயகாந்த் படம் என்றாலே ஆக்ஷன் காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது அப்படி கேப்டன் பிரபாகரன் படம் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்து ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. இந்த படத்தில் மன்சூர் அலிகானை வில்லனாக அறிமுகப்படுத்தினார் விஜயகாந்த். லியாகத் அலிகானின் அனல் பறக்கும் வசனங்களைப் பேசி அசத்தியிருப்பார் விஜயகாந்த்.

இந்நிலையில் விஜயகாந்தின் பிறந்த நாளை ஒட்டி கேப்டன் பிரபாகரன் படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் வெளியான இந்த திரைப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த படத்தில் 5-ம் நாள் வசூல் ரிப்போர்ட் வெளியாகி உள்ளது. அதன்படி ஒட்டுமொத்தமாக 2.2 கோடி வசூல் செய்துள்ளது. 35 வருடங்கள் கழித்து வெளியான இந்த படத்திற்கு இன்னமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

Continue Reading

More in Cinema News

To Top