
Box Office
வசூல் ஏறிக்கிட்டே போகுதே!… கேப்டன் பிரபாகரன் 6 நாள் வசூல் இவ்வளவு கோடியா?!..
Captain Prabhakaran: விஜயகாந்தின் கெரியரில் முக்கிய படமாகவும் அவரின் நூறாவது திரைப்படமாகவும் 1991ம் வருடம் வெளிவந்தது கேப்டன் பிரபாகரன். விஜயகாந்தும் அவரின் நண்பர் இப்ராஹிம் ராவுத்தரும் இணைந்து தயாரித்த இப்படம் பல தியேட்டர்களில் வெள்ளி விழா கண்டது. பல தியேட்டர்களில் 200 நாட்களுக்கும் மேல் ஓடி வசூலை அள்ளியது.
இந்தப் படத்தில் மன்சூர் அலிகானை வில்லனாக அறிமுகம் செய்தார்கள். மேலும் சரத்குமார், ரம்யா கிருஷ்ணன், ரூபினி உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற வசனங்களும், சண்டை காட்சிகளும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது. இப்படம் கடந்த 22 ஆம் தேதி தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.
விஜயகாந்தை வைத்து ஹாலிவுட் ரேஞ்சுக்கு ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்கிற ஆசை இப்ராஹிம் ராவுத்தற்கு பல வருடங்களாக இருந்தது. அந்த ஆசையில் உருவான படம்தான் கேப்டன் பிரபாகரன். ஆர்.கே செல்வமணி முதலில் இயக்கிய புலன் விசாரணை படம் சூப்பர் ஹிட் அடித்தது. எனவேதான் விஜயகாந்தின் நூறாவது படமான கேப்டன் பிரபாகரன் படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

இந்த படத்தை மிகவும் கஷ்டப்பட்டு எடுத்தார்கள். கேரளாவை ஒட்டி உள்ள காடுகளில் பல நாட்கள் ஷூட்டிங் நடந்தது. படக்குழு பல பிரச்சினைகளை சந்தித்தது. அதையெல்லாம் தாண்டித்தான் இப்படம் உருவானது. சமீபத்தில் கடலூரில் இந்த படத்தை பார்த்த பிரேமலதாவும், அவரின் மகன் விஜய பிரபாகரனும் கண்ணீர் விட்டு உணர்ச்சிவசப்பட்ட வீடியோக்களும் வெளியானது
இந்நிலையில், ரீ-ரிலீஸிலும் கேப்டன் பிரபாகரன் நல்ல வசூலை பெற்று வருகிறது. முதல் நாள் 42 லட்சம், இரண்டாம் நாள் 86 லட்சம், மூன்றாம் நாள் 1.3 கோடி, நான்காம் நாள் 1.96 கோடி, 5ஆம் நாள் 2.2 கோடி, ஆறாம் நாள் ஆகிய நேற்று 2.5 கோடி என இப்படம் வசூல் செய்திருக்கிறது. அதாவது படம் வெளியாகி ஆறு நாட்கள் ஆகிவிட்ட நிலையில் 9.24 கோடியை படம் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது.