
latest news
விஜய் சொன்னது தப்பே இல்ல!.. போய் வேலையை பாருங்க!.. கே.எஸ்.ரவிக்குமார் பொங்கிட்டாரே!..
TVK Vijay: முன்பு நடிகர் விஜயாக பார்க்கப்பட்டவர் இப்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராகவும், அரசியல்வாதியாகவும் பார்க்கப்படுகிறார். விஜய் கடந்த வருடமே அரசியல் கட்சியை துவங்கி முதல் மாநாட்டையும் நடத்தினார். இந்த மாநாட்டில் 8 லட்சம் பேர் வரை கலந்து கொண்டதாக சொல்லப்பட்டது.
அரசியல்வாதி ஆகிவிட்டதால் ஆளும் திமுக அரசை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார் விஜய். கிடைக்கும் மேடைகளிலும், சமூக வலைதள பக்கங்களிலும் திமுக அரசை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநாடு சமீபத்தில் மதுரையில் நடந்தது.
இந்த விழாவில் அனல் பறக்க பேசினார் விஜய். பாஜகவை கொள்கை எதிரி என்றும் திமுகவை தனது அரசியல் எதிரி என்றும் பேசினார். அப்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்து பேசிய விஜய் அவரை ‘அங்கிள்’ என அழைத்தார். இது திமுகவினருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. விஜய் அரசியல் நாகரீகம் இல்லாமல் பேசுகிறார் என அவர் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டது.

அவர் ‘அங்கிள்’ என சொன்னதை சிலர் ‘மாமா’ என மாற்றி விஜயை வசைபாட தொடங்கினார்கள்.
இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்த இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ‘எனக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை. அதில் எனக்கு அனுபவமும் இல்லை. ஆனால் விஜய் பேசியது எனக்கு தப்பாக தெரியவில்லை. ஏனென்றால் அவர் ஸ்டாலின் சாரை நேரில் பார்க்கும்போது ‘அங்கிள்’ என்றுதான் அழைப்பார்.
மேடையில் பேசும் போதும் அப்படியே பேசி இருக்கிறார். அதை வேறு அர்த்தத்தில் எடுத்துக் கொண்டு அவரை பலரும் திட்டி வருகிறார்கள். இது தேவையில்லாதது. அவர்களுக்கு நான் சொல்வதெல்லாம் ‘விஜய் பேசியதை விட்டுவிட்டு நாட்டுக்கு என்ன நல்லதோ.. மக்களுக்கு எது நல்லதோ.. அதை போய் பண்ணுங்க.. அது யாராக இருந்தாலும் சரி’ என பொங்கி இருக்கிறார்.