Connect with us
rkselvamani

Cinema News

நான் சம்பாதிச்சு 10 வருஷம் ஆச்சு.. நடந்த அசிங்கம்? கண்கலங்கி பேசிய ஆர்கே செல்வமணி

தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் ஆர்கே செல்வமணி. திரைப்படக் கல்லூரியில் பயின்ற பின்பு பிரபல இயக்குனர் நடிகருமான மணிவண்ணனின் உதவியாளராக தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தார். பின்னர் தனது முதல் திரைப்படத்தை விஜயகாந்தை வைத்து 1990 ஆம் ஆண்டு ”புலன் விசாரணை” என்ற படத்தை இயக்கினார். சில அரசியல் பெரியவர்களின் தூண்டுதலின் பேரில் பல பெண்களை கடத்திக் கொன்ற ஆட்டோ சங்கரின் நிஜ வாழ்க்கை வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட அந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

அதனைத் தொடர்ந்து 1991 ஆம் ஆண்டு விஜயகாந்தை வைத்து அவரது நூறாவது படமான ”கேப்டன் பிரபாகரன்” படத்தை எடுத்தார். படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அதன் பின்னர் விஜயகாந்த் கேப்டன் விஜயகாந்த் ஆனார். இந்த படம் விஜயகாந்துக்கும் ஆர் கே செல்வமணிக்கும் தமிழ் சினிமாவில் ஒரு திறப்பு முனையை ஏற்படுத்திக் கொடுத்தது என்றே சொல்லலாம். அதன் பிறகு பல வெற்றி படங்களில் நடிக்க ஆரம்பித்தார் விஜயகாந்த்.

விஜயகாந்த் திரைப்பயணத்தை மாற்றிய பெருமை ஆர் கே செல்வமணிக்கு சேரும். ஆர் கே செல்வமணியும் செம்பருத்தி, பொன்விலங்கு, கண்மணி என அடுத்தடுத்து திரைப்படங்களை எடுத்துக் கொண்டிருந்தார். இருந்த போதும் அவருக்கு எதிர்பார்த்த வெற்றி எந்த படமும் கொடுக்கவில்லை. கடைசியாக 2015 ஆம் ஆண்டு புலன் விசாரணை-2 படத்தை இயற்றியிருந்தார். இந்த திரைப்படத்தில் பிரசாந்த் ஹீரோவாக நடித்திருப்பார் மற்றும் ஆனந்தராஜ், கார்த்திகேயன், அஸ்வினி, நிழல்கள், ரவி மன்சூர் அலிகான் போன்ற பிரபலங்கள் இதில் நடித்திருப்பார்கள்.

என்னதான் புலன் விசாரணை பெரிய வெற்றி கொடுத்தாலும் புலன் விசாரணை 2 எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதன் பிறகு இன்று வரை செல்வமணி எந்த திரைப்படங்களையும் இயக்கவில்லை. நடிகை ரோஜாவை திருமணம் செய்து கொண்ட ஆர் கே செல்வமணி, இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கிறார்கள். இன்று புது படங்கள் பல வந்தாலும் பழைய படங்களை புதுப்பித்து ரி-ரிலீஸ் செய்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் ஆர் கே செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான கேப்டன் பிரபாகரன் திரைப்படம் மாபெரும் வெற்றி நடை போட்டு வருகிறது.

இந்நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய ஆர் கே செல்வமணி,” நான் சம்பாதித்து பத்து வருடங்களுக்கு மேல் ஆகிறது. ஆனால் அதே மரியாதையுடன் நான் வீட்டில் இருக்கிறேன். அதற்குக் காரணம் என் மனைவி என் மீது வைத்துள்ள அன்பும் மரியாதையும் தான். பல நேரங்களில் நான் பல பேரை பார்த்து உள்ளேன் பொருளாதாரத்தில் மேலிருந்து கீழ் இறங்கும்போது அவளுக்கு கொடுக்கப்படும் மரியாதை வேறு மாதிரி இருக்கும்”.

”ஆனால் இன்றைக்கும் எனக்கு அந்த மாதிரி பிரச்சனை வந்ததே இல்லை. எனக்கு முழு சப்போர்டும் என் மனைவி கொடுத்துள்ளார். ரோஜா வழக்கமான ஒரு நடிகையாக இல்லாமல் எனக்கு ஒரு நல்ல மனைவியாகவும், தோழியாகவும் உடன் இருக்கிறார். என்னோட மகளே என்னை கிண்டல் செய்வார் எந்த வேலையும் இல்லாமல் அலுவலகத்தில் இரவும் பகலமாக உட்கார்ந்து இருக்கிறீர்கள் என்று, ஆனால் என் மனைவி அதைப்பற்றி எல்லாம் கேட்டதே கிடையாது. இன்னைக்கு நான் சாப்பிடும் சாப்பாடு போட்டிருக்கிற டிரஸ் என்னுடைய கார் அதற்கு போடக்கூடிய டீசல் எல்லாமே என் மனைவி எனக்கு தரக்கூடிய பணம் தான்”. என்று கூறியுள்ளார்.

author avatar
SATHISH G
சதீஷ் பி.இ. பட்டதாரியான இவர் 3 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 2 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top