
Cinema News
அறிவில்லையா உனக்கு.. யாரை சொடக்கு போட்டு கூப்பிடுற.. விஜயை நார் நாராய் கிழித்த ரஞ்சித்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். சினிமாவில் உச்சம் தொட்ட அவர் தற்போது அரசியலில் பயணிக்க விரும்புகிறார் அதன்படி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து எதிர்வரும் 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். தனது அரசியல் வருகையை பகிரங்கமாக விக்கிரவாண்டி நடைபெற்ற முதல் மாநாட்டில் அறிவித்தார்.
விஜய் வொர்க் பிரம் ஹோம் (work from home) அரசியல் செய்கிறார் அவர் அவர் மற்ற அரசியல் விதிகளை எதிர்க்க பயப்படுகிறார் என்று பல விமர்சனங்கள் அவர் மீது எழுந்ததுண்டு இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக மதுரையில் நடந்த இரண்டாவது மாநில மாநாட்டில் தன்னுடைய அரசியல் எதிரிகளை இஷ்டத்துக்கு கலாய்த்தார். இது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வந்தது.
இந்நிலையில் விஜய் அப்படி முதலமைச்சர் ஸ்டாலின் பற்றியும் பாரத பிரதமர் நரேந்திர மோடி பற்றியும் பேசியது மிகவும் முட்டாள்தனமானது என்று நடிகர் ரஞ்சித் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசியதாவது,” மதுரை மாநாட்டில் விஜய் ஒரு வரியை பதிவு செய்கிறார். அதில் நான் உச்சத்தில் இருக்கும்போது அரசியலுக்கு வந்தவன். பிழைப்பு தேடி அரசியலுக்கு வந்தவன் இல்லை என்று ஒரு வரியை போடுகிறார். அவர் யாரை மறைமுகமாக சொல்கிறார். இதே உச்சத்தில் இருக்கும்போது அரசியலுக்கு வந்த புரட்சித் தலைவர் எம்ஜிஆர் சொல்கிறாரா ? ”

”அல்லது புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களை சொல்கிறாரா? அல்லது நமக்கெல்லாம் மிகவும் பிடித்த கேப்டன் விஜயகாந்தை சொல்கிறாரா ? அல்லது நேரடியாக சொல்வதற்கு வெட்கப்பட்டு நடிகர் கமலஹாசனை சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன். ஏனென்றால் அந்த வரி அவருக்கு பொருத்தமாக இருக்கும் பிழைப்பு தேடி தான் அரசியலுக்கு வந்திருக்கிறார். அதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் கையை சொடக்கு போட்டு மோடி ஜி அப்படின்னு சொல்றாரே”
”இதே விஜய்தான் 2014 அன்று அவர் முன்னாடி கையைக் கட்டிக் கொண்டு நின்னிய தம்பி ஆனால் இன்று இஸ்லாமிய சகோதரர்களுக்கு துரோகம் விளைவிக்க வந்ததா? ஒன்றிய அரசு என்று கேட்கிறாயே அன்று நீ என்ன கோரிக்கை வைத்தாய் ? இந்த சமூக மாற்றத்திற்காக அல்லது சமூக நலனுக்காக நீ பிரதமரை சந்தித்து இருக்கியா ? உன்னுடைய படம் ”தலைவா” ஓடுவதற்காக கைகட்டி கொண்டு வந்து நின்றாய். இந்த சம்பவம் எல்லாம் மறந்து விட்டாயா நடுவுல கொஞ்சம் பக்கத்தை மறந்து விட்டார்”.
”அவருக்கு ப்ரைனில் பிரச்சனை என்று நினைக்கிறேன். மாநாட்டில் நீ ஒவ்வொரு முறையும் சொடக்கு போட்டு சொல்லும் பொழுது எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. கொஞ்சம் கூட அறிவு இல்லையா? முதல்வரை பார்த்து அங்கிள் என்று சொல்கிறாய் அறிவில்ல, மிஸ்டர் மோடி என்று சொடக்கு போட்டு கூப்பிடுற இதுதான் அரசியல் நாகரிகமா? நீ இப்படி இருக்கிறாயே உன்னை நம்பி வர கூட்டம் எப்படி இருக்கும்”. என்று தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜயை நாறு நாராய் கிழித்து லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி இருக்கிறார் ரஞ்சித்.