
latest news
Siragadikka aasai: விஜயாவின் குறுக்கு புத்திக்கு இதெல்லாம் தேவையா? சீதாவால் மனமுடைந்த மீனா!
Siragadikka aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
பார்வதி வீட்டில் விஜயா யோகா கிளாஸ் ஒன்றை தொடங்கி இருக்கிறார். அதில் சிவன் என்ற ஒருவர் சேர்ந்து இருக்க வந்ததில் இருந்து பார்வதியை அவர் சைட் அடிக்கிறார். விஜயாவிடம் அவர் பார்வதியை காட்டி பெயர் என்னவென்று கேட்க பார்வதி என்கிறார் விஜயா. சிவன் பார்வதி எனச் சொல்லிக்கொள்ள வந்த வேலையை பாருங்க என கூறுகிறார் விஜயா.
தொடர்ந்து அந்த யோகா கிளாஸில் சேர சிந்தாமணி அங்கு வருகிறார். என்ன இங்க வந்து இருக்கீங்க எனக் கேட்க கிளாஸில் சேர வந்து இருக்கேன் எனக் கூறுகிறார். உங்களுக்கு யோகா பிடிக்குமா எனக் கேட்க எனக்கு உங்க கிளாஸ் பிடிக்கும் என்கிறார்.
பின்னர் சிந்தாமணி மனதில் அந்த மீனாவை உங்க வீட்டை விட்டு துரத்தி விடணும். அதுக்கு தான் வந்து இருக்கேன் என யோசித்துக்கொண்டு இருக்கிறார். விஜயா சிந்தாமணியையும் கிளாஸில் வந்து உட்கார வைத்து யோகா கற்றுக்கொடுக்கிறார்.
வீட்டிற்கு வரும் முத்து மீனா படுத்திருப்பதை பார்த்து ரெஸ்ட் எடுப்பாளோ எனச் சென்று விடுகிறார். விஜயா வீட்டிற்கு வந்து கிச்சனில் சாப்பாடு இருக்கிறதா என பார்க்க அங்கு எதுவும் இல்லாமல் போக கோபத்தில் தண்ணீரை வந்து மீனாவின் மீது ஊற்றுக்கிறார்.

பின்னால் வரும் முத்து அந்த ஜக்கை பிடிங்கி தரையில் அடிக்கிறார். அண்ணாமலை சத்தம் கேட்டு என்ன ஆச்சு எனக் கேட்க என்னை அடிக்க வரான். விட்டு இருந்தா என் மண்டையை உடைச்சி விடுவான் எனக் கூற மனோஜ் சப்போர்ட்டாக இவன் செய்றவன் தான் என்கிறார்.
ஸ்ருதி, மீனாவை என்ன தண்ணியா இருக்கு தொட்டு பார்க்க என்ன உடம்பு சூடு இப்படி இருக்கு என்கிறார். அவ சமைக்காம தூங்குறா என விஜயா கூற அவங்களுக்கு உடம்பு சரியில்லைனா இங்க தானே தூங்கணும். அவங்களுக்கு ரூம் இல்லையே. என் மேல ஊத்தி இருந்தா சுடுத்தண்ணியை நான் ஊத்தி இருப்பேன் எனத் திட்டுகிறார்.
இப்போ என்ன பண்ணிட்டேன். எதுக்கு எல்லாரும் என்னை பேசுறீங்க எனக் கேட்க ரோகிணியும் சப்போர்ட்டாக பேசுகிறார். அண்ணாமலை அதுக்கு தூங்குறப்ப இப்படி தண்ணி ஊத்தி எழுப்புறதா? அதான் நாகரீகமா எனக் கேட்கிறார்.
மீனா உன் மேல மரியாதை வச்சி இருக்கா? அது இருக்கவரை தான் நீ இப்படி பண்ண முடியும். போச்சுனா தப்பாயிடும். பசங்க இருக்க போய் தான் அடிக்காம இருக்கேன். இல்லனா எனக் கூறி கையை ஓங்க முத்து அவரை பிடித்து அமர வைக்கிறார்.
மீனாவிடம் அண்ணாமலை மன்னிச்சிடும்மா எனக் கூற அய்யோ இப்படியெல்லாம் சொல்லாதீங்க மாமா என்கிறார். நான் சமைக்க போறேன் எனக் கூற வேண்டாம் நீ ரெஸ்ட் எடு எனக் கூறுகிறார். ஸ்ருதியை பார்க்க அவர் எனக்கு சமைக்க தெரியாது என்கிறார்.
ரோகிணி மீனாவுக்கு உடம்பு சரியில்லை என தெரியாதே. இல்லனா நான் சமைச்சு இருப்பேன் என்கிறார். ஏன் உடம்பு சரியில்லைனா தான் செய்வீங்களா எனக் கடுப்படிக்கிறார். முத்து மீனாவை ரெஸ்ட் எடுக்க சொல்லிவிட்டு ஹோட்டல் போக ரவி நீ அண்ணியை கூட்டிக்கிட்டு ஹாஸ்பிட்டல் போ. நான் போயிட்டு வரேன் என்கிறார்.
விஜயா கோச்சிக்கிட்டு மாடியில் போய் நிற்கிறார். அவர் பின்னால் செல்லும் அண்ணாமலை கடுப்பாக ஆரம்பித்து பொறுமையாக பேசி விஜயாவை சமாதானம் செய்ய முயற்சி செய்கிறார்.