
latest news
Siragadikka Aasai: சீதாவிடம் அருணை வசமாக மாட்ட வைத்த முத்து… செம டிவிஸ்ட்டா இருக்கே!
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
விஜய் தொலைக்காட்சியின் முன்னணி தொடராக இருக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் கடந்த சில வாரங்களாகவே டல்லடித்து வருகிறது. தேவையில்லாத கதைக்களங்களால் ரசிகர்களை வெறுப்பேற்றி வந்த நிலையில் இந்த வார ப்ரோமோ தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது.
கடந்த வாரத்தில் அருணை சில ரவுடிகள் தாக்கிய போது முத்து சரியான நேரத்தில் வந்து அவருடைய உயிரை காப்பாற்றினார். ஆனால் அவரிடம் ஒரு நன்றி கூட சொல்லாமல் சென்ற அருண் சீதாவிடம் நடந்த விஷயத்தை மொத்தமாக மாற்றினார்.
தன்னை அடிக்க ஆட்களை முத்து தான் தயார் செய்து அனுப்பியதாக மாற்றிப் பேசி சீதாவை கோபப்படுத்தினார். இந்த விஷயத்தை சீதா நேராக மீனாவிடம் எடுத்துச் சென்று தன்னுடைய கணவருக்காக சண்டை போட்டார். முத்துவை ரவுடி எனக்கூறி சீதா திட்டினார்.

ஒரு கட்டத்தில் மீனா அவரை அடிக்கவும் சீதா கோபித்து கொண்டு சென்றார். இதனால் இருவரும் பிரிந்து விடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் வார புரோமோவில் முத்து நேராக அருணிடம் வந்து நான் உன்னை அடிக்க வைத்தேனே எப்படி சொல்லி குடும்பத்தில் கலகம் செஞ்சிருக்க எனக் கேட்கிறார்.
சீதாக்கு உன் மேல இருந்த மரியாதையை கெடுக்க தான் இதை செய்தேன். இப்போ அவ உன்னை வெறுத்துட்டா பார்த்தியா என நக்கலாக பேச முத்து இப்போ தான் உன்னை அடிக்க ஆள் அழைச்சிட்டு வந்து இருக்கேன். அடிடா என போனில் யாரையோ அழைக்க சீதா மற்றும் மீனா காரில் இருந்து இறங்கின்றனர்.
அருண் அதிர்ச்சியாக பார்க்கிறார். இதனால் இந்த வாரம் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.