
Box Office
விஜய் சேதுபதி படத்தை விட 5 மடங்கு வசூல்!.. ரவுண்டு கட்டி அடிக்கும் கேப்டன் பிரபாகரன்…
Captain Prabhakaran: விஜயகாந்தின் நூறாவது திரைப்படமாக 1991ம் வருடம் வெளியானது கேப்டன் பிரபாகரன். விஜயகாந்த் சினிமா வாழ்க்கையில் மகுடம் வைத்தது போல அமைந்தது இந்த படம்.
விஜயகாந்தும், இப்ராஹிம் ராவுத்தரும் இணைந்து தயாரித்த இந்த திரைப்படம் வெளியிட்ட இடமெல்லாம் வசூலை அள்ளியது. சில திரையரங்குகளில் 275 நாட்களெல்லாம் ஓடி சாதனை செய்தது.
இந்த படத்தில் அசத்தலான வசனங்களும், அதிரடியான சண்டை காட்சிகளும் இடம் பெற்றிருந்தது. புதுமுக நடிகராக வந்த மன்சூர் அலிகான் வில்லனாக நடித்திருந்தார். உடல் மொழியிலும், வசனம் பேசும் ஸ்டைலிலும் கலக்கி இருந்தார். இளையராஜாவின் இசையில் பாசமுள்ள பாண்டியரு மற்றும் ஆட்டமா தேரோட்டமா இரண்டு பாடல்களுமே ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. மேலும் அவரின் பின்னணி இசை படத்திற்கு பக்கபலமாக இருந்தது.

இந்நிலையில்தான் ஆகஸ்ட் 22ஆம் தேதி கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தை 4k தொழில்நுட்பத்தில் சுமார் 100 திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்தார்கள். முதல் இரண்டு நாட்கள் லட்சங்களில் வசூல் செய்தாலும் மூன்றாவது நாள் முதலே இப்படம் தினமும் இரண்டு கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.
படம் வெளியாகி 10 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் கேப்டன் பிரபாகரன் 20 கோடி வரை வசூல் செய்து அசத்தியிருக்கிறது. 10ம் நாளான நேற்று இப்படம் இரண்டு புள்ளி 2.33 கோடி வசூல் செய்திருக்கிறது
. விஜய் சேதுபதி, யோகி பாபு நடித்து சில நாட்களுக்கு முன்பு வெளியான Ace திரைப்படம் தமிழகத்தில் வெறும் 4 கோடி மட்டுமே வசூல் செய்திருந்தது. ஆனால் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட கேப்டன் பிரபாகரன் இதுவரை அந்த படத்தை விட 5 மடங்கு அதிகமாக வசூல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.