Mohanlal: பணத்தை அள்ளிப்போடு தல!.. ஒரே படத்துல ஜாக்பாட்!.. மோகன்லால் சம்பவம்!..

Published on: December 9, 2025
drishyam3
---Advertisement---

கோலிவுட்டில் எப்படி ரஜினி, கமலோ அதுபோல மல்லுவுட்டில் மோகன்லாலும், மம்முட்டியும் சீனியர் நடிகர்களாக வலம் வருகிறார்கள். சீனியர் நடிகர்களாக மட்டுமில்லாமல் அதிக வசூலை கொடுக்கும் முன்னணி நடிகர்களாகவும் இவர்கள் இருவரும் இருக்கிறார்கள்.

மம்முட்டியை விட மோகன்லால் அதிக ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். ஏனெனில் மம்முட்டி எப்போதும் பரிசோதனை முயற்சிகளை செய்து பார்ப்பார். வித்தியாசமான கதை, அதில் வித்தியாசமான கதாபாத்திரம் என இமேஜ் பார்க்காமல் நடிப்பார். ஆனால் மோகன்லால் அப்படி இல்லை.
கடந்த பல வருடங்களாகவே ஹீரோயிசம் கொண்ட கமர்சியல் மசாலா கதைகளையே தேர்ந்தெடுக்கிறார். அதனால் அவரின் படங்கள் வசூலை வாரி குவிக்கிறது.

நடிகர் பிரித்திவிராஜ் மோகன்லாலை வைத்து இயக்கிய லூசிபர் ஹிட் அடித்த நிலையில் அதன் இரண்டாம் பாகமாக வெளிவந்த எம்புரான் படமும் அசத்தலான வெற்றியை பெற்று 300 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. மலையாள சினிமாவில் அதிக வசூல் செய்த முதல் மலையாள திரைப்படம் என்கிற சாதனையை இந்த படம் பெற்றது. அதேநேரம் இந்த படத்தின் சாதனையை அதற்கு பின்னால் வந்த லோகா திரைப்படத்தின் வசூல் முறியடித்தது.

இது ஒருபக்கம் என்றால் மம்முட்டி, மோகன்லால் இருவருமே தங்களுக்கு சம்பளமாக சில ஏரியாக்களை எழுதி வாங்கிக் கொள்கிறார்கள். ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடித்து சமீபத்தில் உருவாகியுள்ள த்ரிஷ்யம் 3 திரைப்படத்தின் தியேட்டர் ரிலீஸ் உரிமை, ஆடியோ உரிமை, ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமை, ஹிந்தி ரீமேக் உரிமை என எல்லாம் சேர்த்து 350 கோடிக்கு வியாபாரம் ஆகியிருக்கிறதாம். இதுபோக தியேட்டர்கள் மூலம் கிடைக்கும் வசூல் இருக்கிறது.

இந்தப் படத்தை மோகன்லாலிடம் பல வருடமாக மேனேஜர் அந்தோனி என்பவர் தயாரித்திருக்கிறார். மேனேஜர் என்பதால் அவரிடம் போய் எப்படி சம்பளம் கேட்பது என யோசித்த மோகன்லால் சில ஏரியாக்களை எழுதி வாங்கிகொண்டார். படத்திற்கு முன்பே 350 கோடி வியாபாரம், அதன்பின் தியேட்டர்கள் மூலம் கிடைக்கும் வசூல் என கணக்கிட்டால் மோகன்லாலுக்கு மட்டுமே 100 கோடிக்கும் மேல் கிடைக்க வாய்ப்புண்டு என்கிறார்கள். இந்த படம் அடுத்த வருடம் வெளியாகவுள்ளது.

மலையாள சினிமா உலகில் நடிகர்களுக்கு சம்பளம் சம்பளம் என்று பார்த்தால் அது மிகவும் குறைவு. மோகன்லாலுக்கு கூட 25 கோடி சம்பளம்தான் கொடுக்கப்பட்டது. அதனால்தான் லாபத்தில் பங்கு என்கிற முறையை மம்முட்டி, மோகன்லால் போன்ற நடிகர்கள் தேர்ந்தெடுக்க துவங்கியிருக்கிறார்கள்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.