Dude: ‘ட்யூட்’ படத்துல நடிச்சதை பத்தி தேவயாணி கூட கேட்டாங்க.. அதுல என்ன தப்பு? சரத்குமார் காட்டம்

Published on: December 9, 2025
sarath
---Advertisement---

டியூட் படத்தில் நடித்ததை பற்றி சரத்குமார் ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அந்தப் படத்தை பற்றி பல விமர்சனங்கள் எழுந்தன. அதற்கும் தக்க விளக்கத்தை கொடுத்துள்ளார் சரத்குமார். இதோ அவர் கூறியது: நான் அரசியலுக்கு போன பிறகு ஐந்து வருடம் சினிமாவில் பிரேக் எடுக்கிற மாதிரி இருந்தது. 5 வருடங்கள் கழித்து வந்தேன். என்னுடைய மார்க்கெட் வேறு மாதிரியாக இருந்தது. அனைவரும் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று இருந்தால் இந்நேரம் எல்லாருமே வீட்டில் தான் சும்மா உட்கார்ந்து இருப்பார்கள். அப்படி நிறைய பேர் வாய்ப்பு இல்லாமல் உட்கார்ந்து இருக்கிறார்கள்.

ஹிந்தியில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் அமிதாப்பச்சன் கூட வித்தியாசமான கதையில் நடிக்க ஆரம்பித்தார். அவருடைய வயசுக்கு ஏற்ற வகையில் கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார். நான் அப்படித்தான் தேர்வு செய்ய ஆரம்பித்தேன். ஐந்து வருடம் கழித்து நான் சினிமாவிற்கு வந்த பிறகு என்னுடைய மார்க்கெட் என்ன என்பதே எனக்கு தெரியவில்லை. அதனால், கூட ஒரு இன்னொரு ஹீரோ இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்து அப்படிப்பட்ட சப்ஜெக்டுகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தேன்.

அப்படிப்பட்ட படம் தான் போர் தொழில். டியூட் படத்தை பொருத்தவரைக்கும் பல விமர்சனங்கள் எழுந்தன.ஆனால் இவங்கலாம் சொன்னால் ரீச் ஆகும் அப்படின்னு ஒன்னு இருக்கு. இந்த படத்தில் என்ன மெசேஜ் சொல்லி இருக்கிறேன் என்று பார்த்தால் ஆணவ படுகொலை. ஜாதி விட்டு ஜாதி மாறி திருமணம் செய்யும்போது வெட்டுக்குத்து, கல்யாணம் பண்ண தம்பதியை வெட்ட வேண்டும் என்று சொல்லும் பொழுது அந்த எண்ணமே ஒரு தவறான எண்ணம்ம் என்பதை சொல்கிற படமாக தான் இது இருக்கும்.

இந்த படத்தை பார்க்கும் பொழுது ஆடியன்ஸ்களுக்கு சில கேள்விகள் தோன்றும். அதற்கு பதில் சொல்லும் வகையிலும் இந்த படத்தில் சில வசனங்கள் இருக்கின்றன. அதனால் இதை பேலன்ஸ் பண்ணுகிற மாதிரியாகத்தான் இந்த படம் அமைந்தது. தேவயானி கூட எனக்கு போன் பண்ணி பிரதீப் காலை பிடித்து அழுறீங்களே? அது மட்டும் எப்படி நடித்தீர்கள் என்று கேட்டார்.

ஆனால் நான் பிரதீப் கால்கிட்ட உட்கார்ந்து அழவில்லை. என்னுடைய தங்கை மகன் பக்கத்தில் உட்கார்ந்து அழுது கொண்டிருக்கிறேன் .ஒரு கேரக்டராக தான் நான் பார்க்கிறேன். பிரதீப்பை பொருத்தவரைக்கும் வளர்ந்து வரும் ஒரு நடிகர். அவர் கால் அருகில் உட்கார்ந்து அழுவதில் என்ன தப்பு இருக்கு? கேரக்டருக்கு அது தேவைப்படுகிறது. அவ்வளவுதான். அந்த கேரக்டரை பொறுத்த வரைக்கும் ஒரு பெரிய செல்வாக்கு உள்ள மனிதன், அவனுடைய இதயம் நொறுங்குகிற மாதிரி ஒரு விஷயம் நடக்கிறது. கூனி குறுகி போகிறான். அவன் அந்த நிலைமையில் எப்படி இருப்பான்? இப்படித்தானே இருப்பான் என சரத்குமார் டியூட் படத்தில் நடித்ததை பற்றி பகிர்ந்து உள்ளார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.