யாரும் வேண்டாம்!.. எனக்கு கெனிஷாதான் முக்கியம்.. ரவி மோகன் செய்வது சரியா?…

Published on: December 10, 2025
ravi mohan
---Advertisement---

நடிகர் ஜெயம் ரவி ஆர்த்தி என்கிற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகளும் உண்டு. திருமண வாழ்க்கை நன்றாகவே போய்க் கொண்டிருந்த நிலையில் திடீரென மனைவியை பிரிவதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார் ரவி.

மனைவியும் அவரின் குடும்பமும் தனக்கு உரிய மரியாதை கொடுக்கவில்லை.. அவர்களின் கட்டுப்பாட்டிலேயே நான் இருந்தேன்.. எனக்கு செலவுக்கு கூட பணம் தரவில்லை.. என அடுக்கடுக்கான பல புகார்களை கூறினார் ரவி. ஆனால், ஆர்த்தியோ அதையெல்லாம் மறுத்தார்.

#image_title

மனைவிடம் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்திற்கு போனார் ரவி. மேலும், கோவாவில் வசிக்கும் கெனிஷ என்கிற பெண்ணுடன் நெருக்கம் காட்டினார். ஆனால், மனைவியை பிரிந்தததற்கு கெனிஷா காரணமில்லை எனவும் சொன்னார். ஆனால், ஆர்த்தியை பிரிந்தவுடன் ரவி கலந்து கொள்ளும் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் கூடவே வந்தார் கெனிஷா. ஒருபக்கம், ரவி மோகன் புரடெக்‌ஷன் என்கிற தயாரிப்பு நிறுவனம் தொடங்கியிருக்கிறார் ரவி. அதில் 2 படங்கள் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில்தான் ஒரு முக்கிய செய்தி வெளியே கசிந்துள்ளது. ரவியின் அப்பா எடிட்டர் மோகன் உடல்நிலையில் சரியில்லாமல் இருந்திருக்கிறார். அவரை பார்க்க ரவி முடிவெடுத்தபோது ‘ என்னை பார்க்க வந்தால் அவன் மட்டும் வரட்டும்.. கெனிஷா வரக்கூடாது’ என மோகன் கறாராக சொல்லிவிட்டாராம். இதனால் அப்பாவை சென்று பார்ப்பதையே தவிர்த்துவிட்டாராம் ரவி.

ravi mohan

அதேபோல் ரவியின் தங்கை மகளுக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றிருக்கிறது. அங்கும் கெனிஷாவை அழைத்துக்கொண்டு வரக்கூடாது என அவருக்கு சொல்லப்பட அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதையும் ரவி தவிர்த்துவிட்டாராம். இதையெல்லாம் பார்க்கும் போது தன்னுடைய அப்பா, உடன் பிறந்த தங்கை எல்லாவற்றையும் விட கெனிஷாதான் முக்கியம் என ரவி மோகன் நடந்து கொள்வதாக பார்க்கப்படுகிறது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.