ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தியேட்டர்களில் புதிய திரைப்படங்கள் வெளியாகிறது. அதன்பின் 3 வாரங்கள் கழித்து அந்த திரைப்படங்கள் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் போன்ற ஓடிடி தளங்களில் வெளியாகிறது. அதேபோல், நிறைய வெப் சீரியஸ்களும் வெளியாகிறது. ஒருபக்கம், தியேட்டர்களில் படத்தை பார்க்க முடியாதவர்கள் ஓடிடி தளங்களை நாடுகிறார்கள்.
இதில் ஆச்சர்யம் என்னவெனில் தியேட்டரில் வரவேற்பை பெறாத படங்கள் கூட ஓடிடியில் வரவேற்பை பெறுவதுண்டு. தியேட்டரில் படம் வெளியாகி நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வசூலை பெறாத சில படங்கள் ஓடிடிக்கு வந்த பின் ரசிகர்களால் கொண்டாடப்படுவதுண்டு. இது பலமுறை நடந்திருக்கிறது. இந்நிலையில், இந்த வார வெள்ளிக்கிழமை என்னென்ன தமிழ் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரியஸ்கள் வெளியாகிறது என பார்ப்போம்.
இந்த வார ஓடிடியில் முக்கிய படமாக துல்கர் சல்மான் நடித்து நவம்பர் 14ம் தேதி வெளியான காந்தா படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது. தமிழ், தெலுங்கில் வெளியான இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஓடிடியில் வரவேற்பை பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அடுத்து கிஷன் தாஸ், மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலரும் நடித்து நவம்பர் 7ம் தேதி வெளியான ஆரோமலே படம் ஹாட்ஸ்டார் தளத்தில் நாளை வெளியாகவுள்ளது. மேலும், அர்ஜூன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான தீயவர் குலைநடுங்க படம் சன் நெக்ஸ்ட் தளத்தில் நாளை வெளியாகிறது. அதேபோல், 3 Roses வெப் சீரியஸின் 2ம் சீசன் நாளை ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இதுபோக பல மலையாள, தெலுங்கு, ஹிந்தி, ஆங்கில படங்கள் மற்றும் வெப்சீரியஸ்களும் நாளை வெளியாகிறது.
