நண்பனே.. இன்பனே!.. ரஜினிக்கு செம சர்ப்பரைஸ் கொடுத்த கமல்.. வீடியோ பாருங்க!…

Published on: December 12, 2025
rajini kamal
---Advertisement---

அபூர்வ ராகங்கள் படத்தில் ஒரு சின்ன வேடத்தில் ரஜினி அறிமுகமான போது அந்த படத்தில் ஹீரோவாக இருந்தவர் கமல். அப்போதுதான் ரஜினிக்கும் கமலுக்கும் இடையே நட்பு துவங்கியது. அதன்பின் தொடர்ந்து கமல் ஹீரோவாக நடிக்கும் படங்களில் அவருடன் ரஜினி நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் இருவரும் தனியாகப் பிரிந்து நடிக்க துவங்கினார்கள். தனித்தனியே வெற்றி படங்களை கொடுத்தார்கள். சினிமாவைப் பொறுத்தவரை இருவருக்கும் போட்டி என்றாலும் சொந்த வாழ்க்கையில் நல்ல நண்பர்களாகவே இப்போதும் இருக்கிறார்கள்.

திரையுலகில் என்னையும் ரஜினியும் போல நண்பர்கள் ஒருவனும் கிடையாது என்று கமல் ஒரு மேடையிலேயே சொன்னார் கமல். அது உண்மையும் கூட. சூப்பர்ஸ்டாராக இருந்தாலும் கமலை இப்போதும் ஆச்சரியமாக பார்ப்பவர்தான் ரஜினி. எந்த மேடையாக இருந்தாலும் கமலை மேலே தூக்கி வைத்து பேசுபவர்தான் ரஜினி. கமலை போல் ஒரு சிறந்த நடிகர் இல்லை என்று ரஜினி இப்போதும் சொல்வார்.

சினிமாவுக்கு வந்து ரஜினி 50 ஆகிவிட்ட நிலையில் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இரண்டு படங்களில் ரஜினி நடிக்கவிருக்கிறார். முதல் படத்தின் வேலைகள் தற்போது நடந்து வருகிறது. இரண்டாம் இடத்தில் ரஜினியும் கமலும் இணைந்து நடிப்பார்கள் என தெரிகிறது.

இந்நிலையில்தான் இன்று ரஜினிக்கு பிறந்தநாள் என்பதால் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் ஒரு வீடியோவை வெளியிட்டு ரஜினிக்கு வாழ்த்து சொல்லியிருக்கிறது. அதில், அபூர்வ ராகங்கள் துவங்கி இப்போதுவரை ரஜினிக்கும் கமலுக்கும் இருக்கும் இடையே உள்ள நட்பை விளக்கும்படியான புகைப்படங்கள் காட்டப்பட்டிருக்கிறது. இவை எல்லாமே AI தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டிருந்தாலும் ரசிக்கும்படி இருக்கிறது.

மேலும், பின்னணியில் ஒரு பாடலும் ஒலிக்கிறது.. நண்பனே.. மக்கள் போற்றும் இன்பனே. நான் தனி.. நீ தனி இல்லை. நாமது நிரந்தரமே’ என வரிகள் வருகிறது. வரிகளை பார்க்கும்போது கமலே இதை எழுதியிருப்பார் என கணிக்கப்படுகிறது.