Connect with us
bluesattai maran bad girl

latest news

Bad girl: பேட் கேர்ள் பாகவதர் படமா? ஒர்த்தா, ஒஸ்ட்டா? ரெண்டா பொளக்கும் புளூசட்டைமாறன்…!

பேட் கேர்ள் படம் நேற்று வெளியானது. வெற்றிமாறனும், அனுராக் காஷ்யப்பும் இணைந்து தயாரித்துள்ளனர். அஞ்சலி சிவராமன் படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படம் எப்படி இருக்குன்னு பிரபல சினிமா விமர்சகரும், யூடியூபருமான புளூசட்டைமாறன் பகிர்ந்துள்ளார். வாங்க பார்க்கலாம்.

வர்ஷாபரத் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் பேட் கேர்ள். படத்தோட ஆரம்பத்துல ஹீரோயினா நைன்த், டென்த் படிக்கிற பொண்ணைக் காட்டுறாங்க. அந்தப் பொண்ணு படிப்புல கொஞ்சம் மக்குத்தான். இருந்தாலும் கிளாஸ்ல இருக்குற ஒரு பையனை வயசு கோளாறு காரணமா லவ் பண்ணுது. இந்த விஷயம் வீட்டுலயும், ஸ்கூல்லயும் தெரிஞ்சிடுது. அதனால இந்தப் பொண்ணை வேற ஸ்கூல்ல சேர்த்துடுறாங்க. நம்ம சுதந்திரத்து மேல தலையிடுறாங்கன்னு இந்தப் பொண்ணுக்கு குடும்பத்து மேலயும், சமூகத்து மேலயும் கோபம் வருது.

இதுக்கு அப்புறம் அந்தப் பொண்ணு காலேஜ் போகுது. அங்கும் ஒரு காதல் வந்து பிரேக்அப் ஆகுது. அதுக்கு அப்புறம் வேற ஒருத்தரோட தொடர்பு வைக்குது. இந்தப் படத்தைப் பார்த்தா 15 வயசுல இருந்து 30 வயசுக்குள்ள ஒரு பொண்ணு கட்டுப்பாடு இல்லாமல் வாழணும்னு நினைக்குது. அவங்க லைஃப்ல என்னல்லாம் நடந்ததுங்கறதைப் படமா எடுத்துருக்காங்க. இதை எவ்வளவு இன்ட்ரஸ்டா எடுத்துருக்கலாம்? ஆனா படம் முழுக்க சீரியஸாவே எடுத்துருக்காங்க.

bad girl

ஆனா இந்தப் பொண்ணு எப்பப்பார்த்தாலும் சண்டை போட்டுக்கிட்டே இருக்கு. அது ஏன்னு தெளிவுபடுத்தல. செகண்ட் ஆப்ல புதுசு புதுசா ஆண்கள் பழகுறாங்க. அது யாருன்னு பார்த்தா சின்ன வயசுல இந்தப் பொண்ணு கூட படிச்சவங்களாம். அந்தப் பொண்ணோட அம்மா சொல்றாங்க. நீ நல்லா படி. ரெண்டு டிகிரி வாங்கு. வெளிநாட்டுல போய் செட்டிலாகு. அரை டவுசர் போட்டு யாரு கூட வேணாலும் சுத்து. உன்னை யாரு பார்க்கப் போறான்னு சொல்றாங்க.

அதுக்கு அப்புறமும் குடும்பத்து மேல கோபமாத் தான் இருக்கு. பிரிஞ்சித்தான் இருக்கு. நான் படிக்க மாட்டேன். யாரு கூட வேணாலும் சேருவேன்னு சுத்துது. படத்தோட ஒளிப்பதிவு ஒரே இருட்டா இருக்கு. வசனமும் மணிசார் படம் மாதிரி இருக்கு. அதையும் கேட்கவிடாம மியூசிக் வருது. பாகவதர் படம் மாதிரி படம் முழுக்க பாட்டு போகுது. வித்தியாசமான கதைகளம்தான். எந்த சுவாரசியமும் இல்ல. 1.52 மணி நேரம் தான் படம் ஓடுது. ஆனா ரெண்டு மூணு நாள் ஓடுன மாதிரி இருக்குது. அவ்வளவு ஒரு அயர்ச்சியை ஏற்படுத்துது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top