Sivakumar: பேன் இந்தியா வாழ்த்துனா இதுதான்.. ரஜினிக்கு வித்தியாசமாக வாழ்த்து கூறிய சிவக்குமார்

Published on: December 13, 2025
sivakumar
---Advertisement---

ரஜினி 75:

நேற்று தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடியிருக்கிறார். இது அவருக்கு 75வது பிறந்த நாள். அதனால் இந்த பிறந்த நாளை சிறப்பாக ரசிகர்களும் விரும்பினார்கள். இன்னொரு பக்கம் சினிமாவில் அவர் 50 வருட பயணத்தையும் நிறைவு செய்கிறார். அதனால் அரசியல் பிரபலங்களில் இருந்து சினிமா பிரபலங்கள் பலரும் ரஜினிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம் , கன்னடம், தெலுங்கு, பாலிவுட் என எல்லா மொழிகளில் இருந்தும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வந்தனர். உண்மையிலேயே இதுதான் பேன் இந்தியா வாழ்த்து. இந்த நிலையில் சினிமாவில் என்றும் மார்க்கண்டேயன் என அனைவராலும் அழைக்கப்படும் சிவக்குமாரும் தன்னுடைய வாழ்த்தை ரஜினிக்கு கூறியுள்ளார். வயதிலும் சர் சினிமாவிலும் சரி ரஜினிக்கு சீனியர் சிவக்குமார்.

அப்பவே எளிமையின் உருவமா ரஜினி:

ரஜினிகாந்த் 1975 ஆம் ஆண்டு சினிமாவில் நடிக்க வருகிறார். அப்பவே சிவக்குமார் பெரிய நடிகர். ஏகப்பட்ட படங்களில் நடித்து அவருக்கு என அப்போது மார்கெட் உயர்ந்திருந்தது. பகல் நேரம் முழுவதும் சினிமா, இரவு நேரங்களில் நாடகம் என சிவக்குமார் நாடகங்களிலும் நடித்து வந்தார். அந்த நாடகத்தை ரஜினி பார்க்க வருவாராம். அப்போது ஒரு சமயம் சிவக்குமாரை பார்த்து, ‘சார்.. ஸ்கூட்டருக்கு 5 லிட்டர் பெட்ரோல், ஒரு பாக்கெட் சிகரெட், ரெண்டு டீக்கு காசு கிடைக்கிற மாதிரி உங்க படங்களில் சின்னதா ஒரு ரோல் நடிக்க சான்ஸ் வாங்கிக் கொடுக்க’ என கேட்டாராம்.

அவ்வளவு சிக்கனமாகவும் எளிமையாகவும் அப்பவே வாழ்ந்திருக்கிறார் ரஜினி. 1976 ஆம் ஆண்டு புவனா ஒரு கேள்விக் குறி என்ற படத்தில் இருவரும் ஒன்றாக நடித்துள்ளனர். அதுதான் சிவக்குமாரும் ரஜினியும் சேர்ந்து நடித்த முதல் படம். அந்தப் படத்தில் ரஜினி ஹீரோவாகவும் சிவக்குமார் வில்லனாகவும் நடித்திருப்பார்கள். அதுமட்டுமில்லாமல் சிவக்குமார் வில்லனாக நடித்த முதல் படம் புவனா ஒரு கேள்விக் குறி.

தடுமாறிய ரஜினி:

முதல் நாள் படப்பிடிப்பு. ரஜினிக்கு நீளமான டையலாக். 4 அல்லது 5 டேக் எடுத்தும் ரஜினிக்கு சரியா வரல. பயங்கரமா அப்செட் ஆகியிருக்கிறார் ரஜினி. அதுக்கு பிறகுதான் ஓகே ஆகியிருக்கிறது. அந்த நேரத்தில் ஐதரபாத்திலிருந்து அவசரமாக ஒரு போன் வர அதை அட்டெண்ட் செய்து விட்டு வந்திருக்கிறார். அது பாலச்சந்தர் தெலுங்கில் ஒரு படத்தில் நடிப்பதற்கான போன் கால்.

இரவு சூட்டிங் முடிந்த பிறகு சிவக்குமார் காரில்தான் ரஜினி வந்தாராம். வீட்டுக்கு வந்து டிஃபன் சாப்பிட்டு விட்டு போங்க என சிவக்குமார் ரஜினியை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றாராம். டிஃபன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, பேசாமல் ஊருக்கே போய்விடலாம்னு நினைக்கிறேன், தமிழும் சரியா வரல, இப்போ தெலுங்கு படம், தெலுங்கும் தெரியாது, மன உளைச்சலா இருக்குனு ரஜினி சிவக்குமாரிடம் வருத்தமாக பேசியிருக்கிறார்.

ஆசியாவிலேயே பெரிய நடிகர்:

அதெல்லாம் போக போக சரியாகிவிடும் என சிவக்குமார் ஆறுதல் கூறியிருக்கிறார். அதன் பிறகு அவர் முதன் முதலா ஹீரோவா நடிச்ச புவனா ஒரு கேள்விக் குறி சூப்பர் ஹிட். பெங்களூரில் பஸ் கன்டெக்டரா வேலை பார்த்த ஒருத்தன் சினிமாவில் நடிக்க ஆரம்பிச்சு, இன்று ஆசியாவிலேயே பெரிய நடிகன்னு பேர் வாங்கிட்டாரு.

75 வயசிலேயும் இன்னும் ஹீரோவா நடிச்சு, 50 வது ஆண்டை கொண்டாடிக்கிட்டு இருக்காரு. நிலை உயரும் போது பணிவு கொண்டால், உயிர்கள் உன்னை வணங்கும் என்பது ஒரு பழமொழி. இன்று பணிவு , அடக்கத்திற்கு அடையாளமா இந்த மனுஷன் வாழ்ந்து கொண்டிருக்கிறான். தாயின் கருவறையில் இருக்கும் போதே, எங்கு பிறக்க வேண்டும், யாருக்கு பிள்ளையா பிறக்க வேண்டும், எப்படி புகழ் பெற வேண்டும், என்று உன் கதை முடியவேண்டும் மண்டையோட்டிற்குள் இறைவன் திணித்துவிட்டான் என கண்ணதாசன் கூறியிருக்கிறார்.

ரஜினி எத்தனை வருஷம் வாழனும்னு இறைவன் ஏற்கனவே தீர்மானிச்சிருப்பான்,வாழும் காலம் வரைக்கும் இதே மாதிரி புகழோடு இதே மாதிரி ஆரோக்கியத்துடன் இப்பொழுது இருக்கிற மாதிரி எப்போதும் சந்தோஷமாக கடைசி வரைக்கும் வாழனும்னு இறைவனிடம் வேண்டுகிறேன் என சிவக்குமார் ரஜினிக்கு வாழ்த்தை கூறியுள்ளார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.