தெலுங்கு சினிமாவில் அதிரடி ஆக்சன் திரைப்படங்களில் நடித்து வருபவர் பாலகிருஷ்ணா. ரசிகர்கள் இவரை பாலையா என அழைக்கிறார்கள். பாலையா படம் என்றாலே மாஸான சண்டை காட்சிகள், பன்ச் வசனங்கள், அதிரடியான ஆக்சன் காட்சிகள் இடம் பெற்றிருக்கும். எனவே, பாலையா படத்திற்கென்றே தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. பல வருடங்களாகவே பாலையாவின் படங்கள் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி தமிழ்நாட்டிலும் வசூலை பெற்று வருகிறது.
போயப்பட்டி ஸ்ரீனு இயக்கத்தில் பாலையா இரட்டை வேடங்களில் நடித்து 2021ம் வருடம் வெளியான அகாண்டா படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அதில் கோரியாக ஒரு வேடம் ஏற்றிருந்தார். அந்த அகோரி வேடத்தில்தான் வில்லன்களை துவம்சம் செய்து அதகளம் செய்திருந்தார் பாலையா.
இந்த படம் இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் உள்ள தெலுங்கு சினிமா ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது 4 வருடங்கள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாதி வெளி வந்திருக்கிறது. இந்த படத்திற்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பும் இருந்தது. அதற்கு காரணம் இப்படம் தொடர்பாக வெளியான வீடியோக்கள்தான். டிசம்பர் 12ம் தேதியான நேற்று இப்படம் வெளியானது.
அகான்டா 2 படத்தையும் பாலையா ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அதேநேரம் இந்த படம் முதல் பாகம் போல இல்லை. படம் முழுக்க பாலையா பேசிக்கொண்டே இருக்கிறார். இடைவேளை மற்றும் இரண்டாம் பாதியில் வரும் ஒரு சண்டை காட்சி மட்டுமே நன்றாக இருக்கிறது. மற்றபடி படம் ஆவரேஜ்தான் என்று பல விமர்சகர்களும் சொன்னார்கள்.
இந்நிலையில், இப்படம் முதல் நாளான நேற்று இந்தியா முழுவதும் 30 கோடி வரை வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டிலும் இந்த படத்திற்கு நல்ல வசூல் கிடைத்திருக்கிறது.
