இயக்குனர் கஸ்தூரிராஜாவின் மூத்த மகன் செல்வராகவன். தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை படத்தை கூட செல்வராகவன்தான் இயக்கியதாக சொல்லப்பட்டது. ஆனால் வியாபாரத்திற்காக படத்தின் டைட்டிலில் கஸ்தூரிராஜாவின் பெயர் போடப்பட்டது. அதன்பின் தம்பி தனுஷை வைத்து காதல் கொண்டேன், புதுப்பேட்டை ஆகிய திரைப்படங்களை இயக்கினார். மேலும் இவர் இயக்கிய 7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களும் பேசப்பட்டது.
ஆனால் அதன்பின் செல்வ ராகவன் இயக்கிய படங்கள் ரசிகர்களிடம் பெரிய வெற்றியை பெறவில்லை. எனவே ஒரு கட்டத்தில் நடிகராக மாறி பல படங்களிலும் நடித்து விட்டார். 7ஜி ரெயின்போ காலனி படத்தில் தான் அறிமுகம் செய்த நடிகை சோனியா அகர்வாலையே செல்வராகவன் திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில வருடங்களுக்கு கூட அதை நீடிக்கவில்லை. இருவரும் பிரிந்து விட்டனர்.

அதன்பின், சினிமாவைல் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்து வந்த கீதாஞ்சலியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் செல்வராகவன். இவர்களுக்கு மூன்று குழந்தைகளும் உண்டு.
ஆனால் கடந்த சில மாதங்களாகவே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்வதாக செய்திகள் கசிந்தது. ஆனால் இருவருமே அதைப்பற்றி எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார்கள்.
இந்நிலையில், கீதாஞ்சலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செல்வராகவன் தொடர்புடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நீக்கிவிட்டார். இதிலிருந்து அவர்கள் இருவரும் பிரிந்து விட்டது உறுதியாகியுள்ளது.
