குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு பின் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் ஒரு புதிய படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஒருபக்கம் அஜித் கார் ரேஸ்களில் கலந்து கொண்டு வந்த நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் படம் தொடர்பான வேலைகளில் ஈடுபட்டு வந்தார்.
அதேநேரம் இந்த படத்தில் நடிக்க அஜித் 185 கோடி சம்பளம் கேட்டதால் தமிழ் சினிமாவில் எந்த தயாரிப்பாளரும் இந்த படத்தை தயாரிக்க முன்வரவில்லை. எனவே, பாலிவுட் பக்கம் சென்று தயாரிப்பாளர்களை தேடி வருகிறார்கள் என செய்திகள் வெளியானது. இந்த நிமிடம் வரை இப்படத்தை தயாரிக்கப்போவது யார் என்பது தெரியவில்லை அல்லது உறுதியாகவில்லை.
ஆனால் ஆதிக் ரவிச்சந்திரன் படம் தொடர்பான வேலைகளை செய்து வந்தார். குறிப்பாக இந்த படத்தில் நடிக்கவுள்ள நடிகர், நடிகைகளி கமிட் செய்து வந்தார். ஏற்கனவே தெலுங்கு பட நடிகை ஸ்ரீலீலா இந்த படத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார் என செய்திகள் வெளியானது. அதனால்தான் அவர் நேற்று மலேசியா சென்று அஜித்தை சந்தித்ததாகவும் சொல்லப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்களும் வெளியானது.

தற்போது பிரபல நடிகை கெசண்ட்ரா இந்த படத்தில் நடிக்கவிருப்பது உறுதியாகியிருக்கிறது. இவர் தமிழில் சில படங்களில் நடித்திருந்தாலும் அதிகமாக நடித்தது தெலுங்கில்தான். தமிழில் இவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அஜித் நடித்த விடாமுயற்சி படத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் மூலம் தமிழில் மீண்டும் தனக்கு வாய்ப்புகள் வரும் என எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால் அது நடக்கவில்லை. எனவேதான் அஜித்தின் 64வது படத்தில் ஆதிக் ரவிச்சந்திரனை எச்சரித்து பட வாய்ப்பை வாங்கியிருக்கிறாராம்.
