தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகராக பாலையா என்கிற பாலகிருஷ்ணா. தெலுங்கு நடிகர் மற்றும் முன்னாள் முதல்வர் என்டி ராமராவின் மகன்களில் இவரும் ஒருவர். ரஜினியை போலவே 50 வருடங்களாக சினிமாவில் நடித்து வரும் நடிகர் இவர். 80களில் இவர் நடித்த தெலுங்கு படங்கள் தமிழ் டப் செய்யப்பட்டு வெளியாகும். அதன்பின் இடையில் அது கொஞ்சம் குறைந்தாலும் கடந்த சில வருடங்களாக இவரின் படங்கள் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி வருகிறது. அதற்கு காரணம் அவரின் படங்களில் இடம்பெற்றிருக்கும் அசத்தலான சண்டைக் காட்சிகளும் பன்ச் வசனங்களும்தான்.
தமிழ் ரசிகர்களுக்கும் பிடிக்கம்படியான மசாலா படமாகவே பாலையாவின் படங்கள் உருவாகி வருகிறது. குறிப்பாக அவர் பேச்சும் பன்ச் வசனங்களுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உண்டு. 2021ம் வருடம் இவர் நடிப்பில் வெளியான அகண்டா திரைப்படம் தமிழ்நாட்டிலும் நல்ல வசூலை பெற்றது. இந்த படத்தில் அகோரியாகவும் ஆன்மீகம் பற்றி பேசுபவராகவும் வில்லன்களை துவம்சம் செய்யும் ஆகாச ஆகாச சூரனாகவும் நடித்திருந்தார் பாலையா.
தற்போது மீண்டும் அதே இயக்குனர் போயாபட்டி ஸ்ரீனு இயக்கத்தில் அகாண்டா 2 படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. முதல் பாகத்தை ஒப்பிடும்போது இந்த படத்தின் கதை, திரைக்கதை சரியாக அமையவில்லை. இரண்டு ஆக்சன் காட்சிகள் மட்டுமே நன்றாக இருக்கிறது. மற்றபடி படம் முழுக்க ஆன்மீகம் பற்றி பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறார் என்கிற விமர்சனம் வந்தாலும் உலகமெங்கும் உள்ள பாலைய ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகிறார்கள்.
இந்நிலையில் படம் வெளியாகி இரண்டு நாட்களில் இப்படம் இந்தியாவில் மட்டும் 46.29 கோடி வசூல் செய்திருப்பதாக saclinkஇணையதளம் செய்தி வெளியிட்டது. இந்த வசூல் இந்தியாவில் மட்டுமே.. வெளிநாட்டு வசூலையும் சேர்த்தால் கண்டிப்பாக இப்படம் 60 கோடியை நெருங்கிவிடும் என்கிறார்கள்.
இப்படியே போனால் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் இப்படம் 100 கோடி வசூலை தாண்டி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
