விக்னேஷ் சிவன் இயக்கும் திரைப்படம் எல்.ஐ.கே. பிரதீப் ரெங்கநாதன் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் க்ரீத்தி ஷெட்டி நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் எஸ்.ஜே.சூர்யா, மற்றும் அமீர் ஆகியோரும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளனர்.
காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் எந்தப் படங்களையும் இயக்கவில்லை. அஜித் நடித்த துணிவு படத்திற்கு பிறகு அஜித்தை இயக்கும் வாய்ப்பு விக்னேஷ் சிவனுக்கு வந்தது. ஆனால் ஸ்கிரிப்ட் பிரச்சினையில் விக்னேஷ் சிவன் அந்தப் படத்தில் இருந்து விலகிக் கொண்டார்.
அதன் பிறகு பிரதீப் வைத்து முதலில் எல்.ஐ. சி என்ற பெயரில் தான் படத்தை ஆரம்பித்தார். அந்த தலைப்பில் சில பல பிரச்சினைகள் ஏற்பட பிறகு அந்தப் படத்தின் தலைப்பு எல்.ஐ. கே என்று மாறியது. படப்பிடிப்பு முடிந்து பிப்ரவரி மாதமே படம் வெளியாக வேண்டியது.
அதன் பிறகு தீபாவளி ரிலீஸாக வெளியாக வேண்டியது. தீபாவளி நேரத்தில்தாம் பிரதீப் நடித்த டியூட் படமும் வெளியானது. டியூட் படமா அல்லது எல்.ஐ.கே படமா என்ற சூழ் நிலையில் பிரதீப் தரப்பில் டியூட் படத்திற்கு பச்சைக் கொடி காட்டியது,
இந்த நிலையில் இன்னும் ஏன் அந்தப் படம் ரிலீஸாக வில்லை என்பதற்கான காரணத்தை பயில்வான் ரெங்க நாதன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். படத்தின் தயாரிப்பு தரப்புக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையில் சில பல கருத்து வேறு பாடு இருக்கிறதாம்.
அதுமட்டுமில்லாமல் வினியோகஸ்தரர்களுக்கும் இந்தப் படத்தின் மீது நம்பிக்கை வரவில்லையாம். படத்தின் பட்ஜெட் எகிறிப் போய்விட்டதாக விக்னேஷ் சிவனுக்கும் தயாரிப்பு தரப்புக்கும் இடையே சிறிய சலசலப்பு ஏற்பட்டு விட்டதாம். ஆனால் டியூட் படத்திற்கு நல்ல வியாபாரம் ஆனதால்தான் அந்தப் படத்தை முதலில் ரிலீஸ் செய்ததாக பயில்வான் தெரிவித்துள்ளார்.
மேலும் அடுத்த வருடம் பிப்ரவரி 14 காதலர்தினத்தன்று படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.இது ஒரு பக்கம் சீரியஸான விஷயமாக இருந்தாலும் நெட்டிசன்கள் விக்னேஷ் சிவனை கலாய்த்திருக்கின்றனர். படத்தை தவிர வீட்டையும் குடும்பத்தையும் நன்றாக கவனித்து வருகிறார். விமான நிலையத்திற்கு வந்து நயனுக்கு டாட்டா காட்டிக்கிட்டே போக வேண்டியதுதான் என்று கூறி வருகின்றனர்.
