
Cinema News
பாலா படத்தை முடக்கும் கும்பல்?.. SK ரசிகர்களின் அடாவடியால் கதறி அழுத பாலா..
kpy bala ; விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு சீசன் 6 டைட்டில் வின்னர் தான் பாலா. தனது அனல் பறக்கும் பேச்சால் கவுண்டர் அட்டாக் செய்து காமெடி பன்ச்சால் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைப்பார். இவருக்கு ’பன்ச் பாலா’ என்ற பெயரும் இருக்கிறது.
ஒரு காலகட்டத்தில் விஜய் டிவியின் எல்லா நிகழ்ச்சிகளிலும் பாலாவை பயன்படுத்த தொடங்கி விட்டனர். பாலா இல்லாத நிகழ்ச்சியே விஜய் டிவி கிடையாது என்ற நிலை இருந்தது. அந்த அளவிற்கு பாலா தனது தனித்திறமையினால் உயர்ந்திருந்தார். தொடர்ந்து தன்னுடைய பாணியில் கலக்கிக் கொண்டிருந்த பாலாவுக்கு அவர் எதிர்பார்த்தது போலவே வெள்ளித்திரியிலும் வாய்ப்பு கிடைத்தது.
இந்நிலையில் பாலா வெள்ளித் திரையில் ஹீரோவாக வேண்டும் என்ற நீண்ட நாள் கனவு “காந்தி கண்ணாடி” திரைப்படத்தின் மூலம் நிகழ்ந்து இருக்கிறது. சிவகார்த்திகேயனின் மதராஸி படமும் ஒரே நாளில் வெளியாகி இருப்பதால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பாலா வின் படத்தின் போஸ்டர்களை கிழிக்கிறார்கள். ஷோக்கு டிக்கெட் புக் பண்ணியும் ஷோவை கேன்சல் பண்றாங்க என்று காந்தி கண்ணாடி படத்தின் இயக்குனர் ஷெரிப் கூறியிருந்தார்.

இந்நிலையில் மூத்த பத்திரிக்கையாளரும் சினிமா விமர்சகருமான வலைப்பேச்சு அந்தணன் இதைப்பற்றி கூறுகையில்,”காந்தி கண்ணாடி படத்தை பற்றி நிறைய விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. எனக்கு ஷோ கேன்சல் செய்கிற விஷயம் எல்லாம் உண்மையான விஷயங்கள் மாதிரி எனக்கு தெரியவில்லை. ஏனென்றால் ரசிகர்களால் தியேட்டரில் ஓடும் படத்தை தடுக்க முடியாது. அடிப்படையில் பாலா மீது எல்லோருக்கும் தனி மரியாதையும் அன்பும் உண்டு”.
”அதனால் அப்படி எல்லாம் யாரும் செய்ய மாட்டார்கள். ஆனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் போஸ்டர்களை கிழித்தது உண்மைதான். ஏனென்றால் மதராஸி படம் வருகிறது. இந்த நேரத்தில் உன்னுடைய படத்தை வெளியிடக்கூடாது. என்று சொன்னதில் உண்மை இருக்கிறது. சிவகார்த்திகேயன் வளர்ந்து வரும் சமயத்தில் அவருடைய வளர்ச்சி பாதிக்கும் வகையில் பாலா உள்ளே வருவது சிவகார்த்திகேயனின் ரசிகர்களுக்கு பிடிக்காமல் கூட இருக்கலாம்”.
”ஆனால் ரசிகர்களின் அறிவு என்பது அவ்வளவுதான். அவன் தெளிந்த மனநிலையுடன் இருக்க மாட்டான். அப்படி இருந்தான் என்றால் அவன் அங்கே சென்று கொடி கட்டிக்கொண்டு நிற்க மாட்டான். இது சிவகார்த்திகேயனுக்கு தெரிந்தால் கண்டிப்பாக பண்ணக்கூடாது என்று தான் சொல்லுவார்”. என்று கூறி இருக்கிறார்.