விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடர் மூலம் பிரபலமானவர் நடிகை ரச்சித்தா மகாலட்சுமி. தொடர்ந்து பிரிவோம் சந்திப்போம், நாம் இருவர் நமக்கு இருவர் ஆகிய தொடரிலும் நடித்திருந்தார்.

சின்னத்திரை நடிகர் தினேஷ் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட ரச்சிதா, கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

சின்னதிரையை தொடர்ந்து வெள்ளி திரையிலும் கால் பதித்தார் ரச்சித்தா மகாலட்சுமி. உப்பு கருவாடு படம் மூலம் அறிமுகம் ஆனாலும் சமீபத்தில் வந்த பயர் படம் அவருக்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது. அந்த படத்தில் படு கிளாமர் வேடத்தில் அவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது சன் டீவியில் திகில் தொடர் ஒன்றில் நடித்து வருகிறார். இதற்கான பூஜை சமீபத்தில் நடைபெற்றது.

இந்த நிலையில் ரச்சிதா தனது இன்ஸ்டா பக்கத்தில் கலக்கலான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஆர்டினை பறக்கவிட்டு வருகின்றனர்.

