
Cinema News
ஹாலிவுட்டுக்கு போகும் மதராஸி பட வில்லன் வித்யூத் ஜம்வால்!.. பரபர அப்டேட்!…
Vidyut Jammwal: தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற ஆகிய திரைப்படங்களில் நடித்து வருபவர் வித்யூத் ஜம்வால். சிறு வயது முதலே களரி உள்ளிட்ட பல பயிற்சிகளை பெற்றவர் இவர். இளம் வயதிலேயே 25க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சென்று மார்சியல் ஆர்ட்ஸ் லைவ் ஷோ நடத்தியவர் இவர். ஜாக்கிசானை தனது மானசீக குருவாக கொண்டவர்.
ஹிந்தி நடிகர் ஜான் ஆபிரகாம் நடித்த போர்ஸ் என்கிற படத்தில்தான் இவர் முதல் முதலில் அறிமுகமானார். இது தமிழில் சூர்யா நடித்த காக்கா காக்க படத்தில் ஹிந்தி ரீமேக் ஆகும். இந்த படத்தில் நெகட்டிவ் வேடத்தில் நடந்ததற்காக விருதையும் வாங்கினார் வித்யூத். அதன்பின் தொடர்ந்து சில ஹிந்தி படங்களில் வில்லனாக நடித்தார்.

ஒரு கட்டத்தில் ஹிந்தியில் ஹீரோவாகவும் நடிக்க தொடங்கினார். இவர் நடிக்கும் எல்லா படங்களிலுமே ஆக்சன் காட்சிகள் அசத்தலாக இருக்கும். பேண்டை மட்டும் போட்டுக் கொண்டு சிக்ஸ் பேக்கை காட்டி ஜிம் பாடியுடன் சண்டை போட்டு தெறிக்க விடுவார். ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இந்த படத்தில் இவரின் நடிப்பு தமிழ் ரசிகர்களுக்கும் பிடித்திருந்தது. அடுத்து லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்த அஞ்சான் படத்தில் அவரின் நண்பராக நடித்திருந்தார்.
இடையில் சில ஹிந்தி படங்களில் ஹீரோவாக நடித்துவிட்டு இப்போது மீண்டும் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மதராஸி படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். படத்தை பார்த்து விட்டு வருபவர்கள் ‘இந்த படத்தின் ஹீரோவே வில்லன்தான்.. அசத்தலாக நடித்திருக்கிறார்.. சண்டை காட்சிகளில் அதகளம் செய்திருக்கிறார். அவருக்காகவே படம் பார்க்கலாம்’ என கூறினார்கள்.

மதராஸி படத்தில் வித்யூத் நடித்துள்ள ஆக்சன் காட்சிகளை விமர்சகர்களும் பாராட்டுகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் மதராஸி படத்தில் பெரிய பிளஸ் ஆக்சன் காட்சிகள் மட்டும்தான்.
இந்நிலையில் இதுவரை தமிழ், ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வந்த வித்யூத் இப்போது ஹாலிவுட்டிக்கும் போகவிருக்கிறார்.
பிரபல வீடியோ கேமான Street Fighter சீரிஸை மையமாக வைத்து உருவாகும் ஆக்சன் படத்தில் Dhalsim என்கிற வேடத்தில் நடிக்கவிருக்கிறார் வித்யூத். இந்த படத்தில் கோடி ரோட்ஸ், ரோமன் ரெய்ன்ஸ், ஜேசன் மோமோ, ஒலிவியர் ரிச்சர்ட்ஸ், 50 சென்ட், ஆண்ட்ரூ கோஜி, ஆர்வில் பேக் உள்ளிட்ட பல பிரபலமான நடிகர்கள் நடிக்கிறார்கள்.