மனோஜ் பாரதிராஜா முதல் ஏவிஎம் சரவணன் வரை!.. 2025-ல் நிகழ்ந்த பிரபலங்களின் மரணம்…

Published on: December 17, 2025
manoj
---Advertisement---

தமிழ் சினிமாவைப் பொறுத்த வரைக்கும் இந்த வருடம் ஒரு சோகமான வருடம் என்று சொல்லலாம். ஏனெனில் பல்வேறு துறைகளில் பாப்புலராக இருந்த ஒரு சில பிரபலங்களின் மரணம் தான் அதற்கு காரணம். இந்த வருடத்தின் கடைசி மாதத்தில் நாம் இருக்கிறோம். வருடங்கள் கடந்தாலும் ஒரு சில பேரை நாம் அவ்வளவு சீக்கிரமாக மறக்க முடியாது. மறைந்தும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று சொல்வார்கள். அந்த வகையில் இந்த வருடம் எந்தெந்த பிரபலங்கள் இறந்தார்கள் என்பதைப் பற்றி தான் இந்த செய்தியில் நாம் பார்க்க இருக்கிறோம்.

ஏவிஎம் சரவணன்:

தமிழ் சினிமாவில் ஒரு பழம்பெரும் தயாரிப்பாளராக இருந்தவர் ஏவிஎம் சரவணன். வயது மூப்பு மற்றும் உடல் நிலை காரணமாக சமீபத்தில் தான் அவர் இறந்தார். அவருக்கு வயது 86. அவருடைய இழப்பு தமிழ் சினிமாவிற்கு ஒரு பெரிய இழப்பாகவே பார்க்கப்படுகிறது. எம்ஜிஆர் சிவாஜி தொடங்கி சிம்பு வரைக்கும் ஒவ்வொரு தலைமுறையினரை வைத்தும் இவர் பல படங்களை எடுத்திருக்கிறார்.

மனோஜ் பாரதிராஜா:

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் பாரதிராஜா மாரடைப்பு காரணமாக மார்ச் மாதம் காலமானார். அவருக்கு வயது 48. அவருடைய மரணம் ஒட்டுமொத்த கோலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தாஜ்மஹால் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான மனோஜ் பாரதிராஜா ஈர நிலம், வருஷமெல்லாம் வசந்தம், சமுத்திரம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். அவர் மார்கழி திங்கள் என்ற படத்தை இயக்கினார். அதுதான் அவர் இயக்கிய முதல் திரைப்படம். இவருடைய இழப்பு தமிழ் சினிமாவிற்கு ஒரு பெரிய இழப்பாகும்.

ரோபோ சங்கர்:

சின்னத்திரையில் இருந்து வந்த ரோபோ சங்கர் வெள்ளி திரையில் ஒரு கலக்கு கலக்கினார். கடந்த செப்டம்பர் மாதம் தான் இந்த உலகை விட்டு அவர் மறைந்தார். உடல்நிலை காரணமாக அவருடைய மரணம் நிகழ்ந்தது. அவருக்கு வயது 46. அவருடைய மறைவுக்கு கமல்ஹாசன் மற்றும் பல நடிகர்கள் வந்து அஞ்சலி செலுத்தினர். அவருடைய தனித்துவமான காமெடி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. குறுகிய காலத்தில் மறக்க முடியாத நினைவுகளை விட்டு சென்றவர் ரோபோ சங்கர்.

மதன் பாப்:

தமிழ் சினிமாவின் ஒரு பாப்புலரான காமெடி நடிகர் மதன் பாபு. இவர் ஆகஸ்ட் மாதம் தன்னுடைய 71 வது வயதில் காலமானார். புற்றுநோயால் பெரும் அவதிக்கு உட்பட்ட மதன் பாபு கடந்த செப்டம்பர் மாதம் தான் காலமானார். அவருடைய தனித்துவமான காமெடி உடல்மொழி இசை அறிவு போன்றவைகளால் தனக்கென தனி அங்கீகாரத்தை தக்க வைத்துக் கொண்டவர். தமிழ் சினிமாவிற்கும் சின்னத்திரைக்கும் அவருடைய அர்ப்பணிப்பு என்பது மிக மிக முக்கியமானது. அவருடைய சிரிப்புதான் அவருக்கு உண்டான அடையாளம்.

அபிநய்:

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமான அபிநய் உடல் நலம் சரியில்லாமல் காலமானார். நீண்ட நாட்களாக பெரும் நோயால் அவதிப்பட்டு வந்த அபிநய் சிகிச்சை பலனின்றி இறந்தார். நடிகர் மட்டுமல்ல அவர் ஒரு சிறந்த பின்னணி பாடகரும் கூட. அவருடைய சிம்ப்ளிசிட்டி கடின உழைப்பு எப்பொழுதுமே ரசிகர்களிடம் மறக்க முடியாத நினைவுகளாக இருக்கும். இவருடைய மறைவும் அனைவருக்கும் ஒரு பேரதிர்ச்சியாக இருந்தது.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.