
Cinema News
விஜயகாந்தின் சகோதரி காலமானார்!.. சென்னையில் இறுதிச்சடங்கு!..
Vijayakanth: மதுரையைச் சேர்ந்தவர் நடிகர் விஜயகாந்த் சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னை வந்து பல வருடங்கள் வாய்ப்பு தேடி பல அவமானங்களை சந்தித்து நடிகராக மாறினார். இவரின் அப்பா மதுரையில் ரைஸ் மில் நடத்தி வந்தார். வசதிக்கு ஒன்றும் குறைவில்லை. விஜயகாந்தை அவரின் அப்பா சிறந்த பள்ளியில்தான் படிக்க வைத்தார்.
ஆனால் விஜயகாந்துக்கு படிப்பில் ஆர்வம் ஏற்படவில்லை. சினிமாவில் பல வருடங்கள் போராடி தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். அம்மன் கோவில் கிழக்காலே, வைதேகி காத்திருந்தாள் போன்ற திரைப்படங்கள் விஜயகாந்தை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. விஜயகாந்த் என பெரிய ரசிகர் கூட்டமே உருவானது.
சினிமா நடிகராக மட்டுமில்லாமல் மனிதநேயமிக்க மனிதராக விஜயகாந்த் இருந்தார். பல புதிய தயாரிப்பாளர்களை, இயக்குனர்களை, நடிகர்களை சினிமாவில் அறிமுகம் செய்தார். பசியோடு வந்த பலருக்கும் சாப்பாடு போட்டார். பலருக்கும் பல வகைகளிலும் உதவினார். விஜயகாந்தின் குடும்பத்திலிருந்து சினிமாவுக்கு வந்தவர் விஜயகாந்த் மட்டுமே.

விஜயகாந்துக்கு விஜயலட்சுமி என்கிற சகோதரி உண்டு. சென்னை அண்ணா நகரில் வசித்து வந்த விஜயலட்சுமி பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவராக இருந்தார். மருத்துவத்துறையில் பல வருடங்கள் பணிபுரிந்திருக்கிறார். 78 வயதான அவர் இன்று காலமானார்.. அவரின் இறுதிச் சடங்கு நாளை மாலை 1.30 முதல் 3 மணிக்குள் அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டில் நடைபெறவிருப்பதாக தேமுதிக சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.