
Cinema News
surya: வாடிவாசலை கைவிட துடிக்கும் சூர்யா?.. வெற்றிமாறனுக்கும் தாணுவுக்கும் வசமா பத்திக்கிச்சு..
surya : சூர்யா, வெற்றிமாறன் கூட்டணி கூட்டணியில் உருவாக இருந்த ”வாடிவாசல்’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஒருபுறம் வெற்றிமாறன் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். மற்றொருபுறம் சூர்யா வெற்றிக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார். அப்படி இருக்க சூழ்நிலையில் வெற்றிமாறனுடன் சேர்ந்து சூர்யா ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ரசிகர்களுக்கும் கடந்த இரண்டு வருடங்களாக ஏமாற்றமே மிச்சமாக இருக்கிறது. இந்நிலையில் இதைப் பற்றி வலைப்பேச்சு பிஸ்மி கூறுகையில், “வாடிவாசல் படத்திற்காக வெற்றிமாறனுக்கு பேசப்பட்ட 19 கோடி ரூபாய் சம்பளத்தை தயாரிப்பாளர் தாணு ஏற்கனவே கொடுத்துவிட்டார். வெற்றிமாறனை பொறுத்தவரை தன்னுடைய அடுத்த படத்தை தயாரிப்பாளர் தாணுவிற்குதான் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அவர் நம்ம மீது கோபப்பட்டாலும் நாம பெருசாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று தாணுவிற்கு சிம்பு கூட்டணியில் இந்த படத்தை எடுக்கிறார்”.

”இதை முடித்துவிட்டு சூர்யா ப்ராஜெக்ட் அடுத்த வருடம் உண்டு. வெற்றிமாறன் இயக்கி தாணு தயாரிக்கப் போகிறார். அது வாடிவாசலாக இருக்கப் போகிறதா? அல்லது வேறு கதைகளாக இருக்கப் போகிறதா? என்பது இனிமேல் தான் தெரிய வரும். ஆனால் வெற்றிமாறன் இயக்கத்தில் தாணு இரண்டு படம் தயாரிக்கப் போவது உறுதி. காலம் தாழ்த்த காரணம் வாடிவாசலில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று சூர்யா ஒற்றை காலில் நிற்கிறார்”.
”ஆனால் வெற்றிமாறன் மாற்றம் செய்ய முடியாது என்று உறுதியாக நிற்கிறார். சில முரண்பாடுகளும் இருவரிடமும் போய்க்கொண்டிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் இயக்குனர் அமீருக்கு ஒரு முக்கிய கதாபாத்திரம் இருக்கிறது. அமீர் இந்த படத்தில் இருக்க வேண்டும் என்று வெற்றிமாறன் நினைக்கிறார், இருக்கக்கூடாது என்று சூர்யா நினைக்கிறார். அதே நேரம் அதை நேரடியாக சொல்லாமல் வெவ்வேறு வழிகளில் அழுத்தம் கொடுக்கிறார் சூர்யா. இதன் காரணமாகத்தான் வாடிவாசல் இன்னும் ஆரம்பிக்கப்படாமல் இருக்கிறது”. என்று கூறியுள்ளார்.