BB Tamil 9:
விஜய் டிவியில் பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இப்போது 9வது சீசன் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு முன் இருந்த சீசன்களை காட்டிலும் இந்த சீசன் ரசிகர்களின் முகம் சுழிப்பிற்கு ஆளாகியிருக்கிறது. வைல்ட் கார்ட் போட்டியாளர்களாக பிரஜன், சாண்ட்ரா, திவ்யா, உள்ளே போன பிறகு அந்த போக்கு கொஞ்சம் மாறியிருப்பதாகவே ரசிகர்கள் கருதுகின்றனர்.
கடைசியாக பிரஜன் மற்றும் ரம்யா வெளியேற்றப்பட்டனர். இதில் தம்பதிகளாக விளையாடிக் கொண்டிருந்த பிரஜன் மற்றும் சாண்ட்ரா, பிரஜன் போன பிறகு சாண்ட்ராவின் நடவடிக்கையில் கொஞ்சம் மாற்றம் இருப்பதாகவே பார்க்கப்படுகிறது. சோசியல் மீடியாக்களில் சாண்ட்ராவை பிக்பாஸில் சந்திரமுகியாக சுற்றிக் கொண்டிருக்கும் போட்டியாளர் என சாண்ட்ராவை வச்சு செய்து வருகின்றனர்.
ஆரம்பத்தில் சாண்ட்ராவும் திவ்யாவும் நெருங்கிய தோழிகளாக இருந்த நிலையில் இப்போது திவ்யாவை எதிர்த்து வருகிறார் சாண்ட்ரா, ஆனால் பிக்பாஸ் வீட்டிற்குள் உயிரே போகும் அளவுக்கு பிரச்சினை நடந்தாலும் எங்கள் சந்தோஷம்தான் முக்கியம் என சுற்றிக் கொண்டிருக்கும் போட்டியாளர்கள் பார்வதி மற்றும் கம்ருதின். கம்ருதீனை பொருத்தவரைக்கும் ஆரம்பத்தில் அரோரா, அதன் பிறகு ஆதிரை என ரூட்டு விட்டுக் க் கொண்டிருந்தார்.
ஆனால் கடந்த சில வாரங்களாகவே பார்வதியுடன் நெருக்கமாக பழகி வருகிறார். சமீபத்தில் லிவ்விங் அறையில் இருந்து அனைவரும் வெளியே வந்த நிலையில் பார்வதி மற்றும் கம்ரூதின் இருவர் மட்டுமே உள்ளே போனார்கள். உள்ளே என்ன நடந்தது என தெரியவில்லை. அதற்குள் பிக்பாஸ் கம்ரூதினை வெளியே வரும்படி அழைத்தார். அதன் பிறகுதான் இருவரும் வெளியே வந்தனர்.
இப்படி நாளுக்கு நாள் இருவரின் அட்ராஸிட்டி அதிகரித்துக் கொண்டே போக உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கும் இவர்களின் நடவடிக்கை பிடிக்காமல் தான் இருக்கிறது. வெளியே வந்த பிரஜன் மற்றும் ரம்யா உட்பட இருவரும் கொஞ்சம் ஒவராகத்தான் போகிறார்கள் என்ற படி பேசியிருந்தார்கள். இந்த நிலையில் நேற்று இரவு என்ன நடந்தது என தெரியவில்லை. இன்று காலை பார்வதியும் கம்ரூதினும் வெளியே உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
அதில் பார்வதி அழுதுக் கொண்டிருக்கிறார். அதற்கு கம்ருதின், ‘இன்னும் 30 நாள்கள் இருக்கிறது. அதன் பிறகு நடக்கிறதை நாம் எதிர்க் கொள்வோம்’ என ஆறுதல் சொல்கிறார். அதற்கு பார்வதி , ‘என் அம்மா பார்த்துக் கொண்டிருப்பார். என்ன நினைப்பாங்கனு தெரியல’னு சொல்லும் போது , கல்யாணம் பண்ணிக்க போறோம்னு சொல்லு என கம்ரூதின் கூறுகிறார்.
உனக்கு 29 வயசு ஆகுதுல, சரியான வயசுதான் என ஆறுதல் கூறுகிறார். இதற்கு முதல் நாள் இரவு பார்வதி மிகவும் சோகமாக தன் படுக்கையறையில் உட்கார்ந்தவாறு ‘இவ்ளோ கன்ட்ரோலான சூழ்நிலையில் என்னால் அந்த கன்ட்ரோலை மெயின்டெயின் பண்ண முடியல பிக்பாஸ். இது கட்டுப்பாடு இல்லாத எமோஷன் பிக்பாஸ்’ என புலம்பிக் கொண்டிருக்கிறார். பார்வதி இரவில் இப்படி பேசுவதை பார்க்கும் போது அன்று இரவு பார்வதிக்கும் கம்ருதினுக்கும் ஏதோ ஒன்று நடந்திருப்பதாக நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
