
Cinema News
16 நாள் கால்ஷீட்!.. சி.எம் போஸ்ட் கொடு!.. விஜயை மீம்ஸ் போட்டு கலாய்க்குறாங்களே!..
TVK Vijay: நடிகர் விஜய் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போதே அரசியலுக்கு போய்விட்டார். 250 கோடி சம்பளம் வாங்கும் நடிகராக இருந்தும் அதை விட்டுவிட்டு தன் அரசியல் போய்விட்டதாக விஜயே சொல்லி இருக்கிறார். தமிழக வெற்றி கழகம் என்கிற கட்சியை துவங்கி இதுவரை இரண்டு மாநாடுகளை வெற்றிகரமாக நடத்தி முடித்து விட்டார். இரண்டாவது மாநாடு மதுரையில் நடந்த போது சுமார் 10 லட்சம் பேர் கலந்து கொண்டார்கள்.
இதில் நடந்த சில விஷயங்கள் சர்ச்சைக்கு உள்ளானாலும் விஜய்க்கு கூடிய கூட்டம் தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகளை அசைத்து பார்த்திருக்கிறது. வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் ஒரு மாற்றத்தை உருவாக்கும் என பலரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். குறிப்பாக இளைஞர்களின் ஓட்டு அவருக்கு கிடைக்கும் என நம்பப்படுகிறது. அதேநேரம் எந்த கட்சியுடன் கூட்டணி வைக்காமல் விஜய் தனித்தே போட்டியிடுவார் என சொல்லப்படுகிறது.
விஜய் தொடர்ந்து திமுகவை மட்டுமே விமர்சித்து வருகிறார். அதுவும் முதல்வர் ஸ்டாலினை அவர் அங்கிள் சாதாரணமாக சொல்லியது திமுகவினருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. எனவே சமூக வலைதளங்களில் விஜயை தொடர்ந்து மோசமாக அவர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள். இந்நிலையில்தான் விஜய் செப்டம்பர் 13 முதல் டிசம்பர் 20ஆம் தேதி வரை மொத்தம் 16 நாட்கள் தமிழகத்தில் வெவ்வேறு இடங்களில் மக்களை சந்தித்து அவர் பேசப்போவதாக தமிழக வெற்றி கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

வருகிற செப்டம்பர் 13ஆம் தேதி திருச்சி பெரம்பலூர், அரியலூரில் துவங்கி டிசம்பர் 20ஆம் தேதி மதுரையில் அவரின் பயணம் முடிவடைகிறது. இந்த 16 நாட்களும் வார இறுதியான சனிக்கிழமை ஆகும். இதையடுத்து ‘சனிக்கிழமை மட்டும்தான் விஜய் மக்களை சந்திப்பாரா? இவர் என்ன வீக் எண்ட் பாலிட்டிசீயனா?’ என திமுக ஆதரவாளர்களும், திமுக ஐடி விங்கும் ட்ரோல் செய்து வருகிறார்கள். மேலும் ‘16 நாள் கால்ஷீட் தருகிறேன். எனக்கு சிஎம் போஸ்ட் கொடு’ என விஜய் கேட்பது போல கவுண்டமணி காமெடி காட்சியை வைத்து மீம்சை உருவாக்கி வைரலாக்கி வருகிறார்கள்.

தலைவர் விஜய் மக்களுக்காகவே வார இறுதியில் அவர்களை சந்திக்க திட்டமிட்டிருக்கிறார். அவரை ட்ரோல் செய்பவர்கள் எல்லாம் திமுக ஆதரவாளர்கள்தான்.. மக்கள் இல்லை என தாவெகவினர் பொங்கி வருகிறார்கள்.