விக்ரம் பிரபு நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள படம் சிறை.
கும்கி படம் முலம் அறிமுகம் ஆனவர் விக்ரம் பிரபு. முதல் படமே சூப்பர் ஹிட் மட்டுமின்றி சிவாஜி குடும்பத்திலிருந்து வந்ததால் விரைவில் முன்னணி இடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் அடுத்தது அவரது படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை.
இந்த சூழ்நிலையில் அவர் நடிப்பில் வெளியான டாணாகாரன் என்ற படம் நல்ல விமர்சனத்தை பெற்றது. ஓடிடியில் வெளியான இப்படம் திரையரங்கில் வெளிவந்திருந்தால் நிச்சயம் ஹிட் அடித்திருக்கும் என்று பேசப்பட்டது.
மீண்டும் ஒரு வெற்றி தேவை என்ற நிலையில் விக்ரம் பிரபு நடிப்பில் வருகிற 25ம் தேதி வெளியாக உள்ள படம் சிறை. இப்படத்தில் இன்னொரு நாயகனாக
விஜய் நடித்த மாஸ்டர், லியோ உள்ளிட்ட பல உள்ளிட்டப் படங்களை தயாரித்த எஸ்.எஸ்.லலித்குமாரின் மகன் அக்ஷய்குமார் நடிக்கிறார். நாயகிகளாக அனந்தா, அனிஷ்மா நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை வெற்றி மாறனிடம் இணை இயக்குனராக பணியாற்றிய சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ளார். இப்படத்தையும் லலித்குமார் தயாரித்துள்ளார்.
இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இப்படம் குறித்த முதல் விமர்சனம் வெளியாகியுள்ளது. பிரபல தயாரிப்பாளர் அருண் விஷ்வா இப்படத்தை சமீபத்தில் பார்த்தாராம். இது குறித்து அவர் தனது ட்விடடர் பக்கத்தில் கூறியபோது,
சிறை இந்த ஆண்டின் சிறந்த படைப்புகளில் ஒன்று. அறிமுக இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி மற்றும் அவரது டீம் படத்தை சிறப்பாக எடுத்துள்ளனர். விக்ரம் பிரபு மற்றும் உடன் நடித்த அனைவருடைய நடிப்பும் நன்றாக இருந்தது. அறிமுக நடிகர் எல்.கே. அக்ஷய் குமார் தனது திரை வாழ்க்கையை இப்படியொரு படத்தில் தொடங்கியது மிகவும் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.
இவரது இந்த கருத்தை பார்க்கையில் படம் நிச்சயம் வெற்றியடையும் என்பது தெரிகிறது.
