பொன்ராம் இயக்கத்தில் கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடித்து நேற்று வெளியான திரைப்படம்தான் கொம்பு சீவி. ஏற்கனவே சில படங்களில் நடித்திருந்தாலும் அந்த படங்கள் சண்முக பாண்டியனுக்கு கை கொடுக்கவில்லை. எனவே அவருக்கு ஒரு ஹிட் தேவைப்படும். நிலையில்தான் சிவகார்த்திகேயனை வைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற ஹிட் படங்களை கொடுத்த பொன்ராம் இயக்கத்தில் நடித்திருக்கிறார்.
இந்த படத்தில் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்க தர்ணிகா என்கிற புதுமுகம் கதாநாயகியாக அறிமுகமாகியிருக்கிறார். இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். மதுரை பின்னணியாக கொண்டு ஒரு கிராமத்து பின்னணியில் படத்தை உருவாக்கியுள்ளனர். நேற்று படம் வெளியானது முதலே இந்த படத்துக்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.
படத்தில் ஆக்சன் காட்சிகளும் காமெடி காட்சிகளும் நன்றாகவே வந்திருப்பதாக ரசிகர்கள் சொல்கிறார்கள். பல நாட்களுக்கு பிறகு குடும்பத்துடன் பார்க்க கூடிய ஒரு திரைப்படம் என ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இநிலையில்தன் கொம்பு சீவி திரைப்படம் வெளியான முதல் நாளில் தமிழகத்தில் 30 லட்சம் வசூல் செய்திருக்கிறது.
இன்று சனி மற்றும் நாளை ஞாயிறு என இரண்டு வார இறுதி நாட்கள் வருவதால் கண்டிப்பாக இந்த படத்திற்கு வசூல் அதிகரிக்கும் என கணிக்கப்படுகிறது.
