
Cinema News
Vijay TVK: 6 மணி கதையெல்லாம் இங்க பழிக்காது.. விஜயகாந்த் மாதிரி விஜயையும் சிக்க வைக்க சதி
Vijay TVK: விஜயைப் பற்றிய ஒரு விமர்சனம் எழுந்து வருகிறது. ஆறு மணிக்கு மேல் அவர் வெளியில் வர மாட்டார். இந்த சுற்று பயணத்தையாவது ஆறு மணிக்கு மேல் தொடர்வாரா என பல கேள்விகள் வைக்கப்படுகின்றன. இது சமூக வலைதளங்களில் அதிக பேசு பொருளாக மாறி இருக்கிறது. இதைப் பற்றி வலைப்பேச்சு பிஸ்மி அவருடைய கருத்தை தெரிவித்திருக்கிறார். முதலில் ஆறு மணி விமர்சனம் குறித்த பின்னணியை பற்றி பார்க்க வேண்டும். ஏனெனில் திமுகவை சேர்ந்த இணைய கூலிப்படைகள் முக்கியமாக 6 மணிக்கு மேலாக நிதானத்தில் இல்லாத தினந்தோறும் குடிப்பவர்களே கூட விஜய் மீது இப்படி ஒரு விமர்சனத்தை வைக்கிறார்கள்.
விஜய் ஒரு மொடா குடிகாரர், 6 மணிக்கு மேல் குடிக்கவில்லை என்றால் அவருடைய கை கால்கள் எல்லாம் நடுங்கும் என்ற விமர்சனத்தை இவர்கள் முன் வைக்கிறார்கள். இது எப்படி இருக்கிறது என்றால் விஜயகாந்தை ஒரு குடிகாரனாக சித்தரித்து அவரை காலி பண்ணார்கள். கிட்டத்தட்ட அதே டெம்ப்ளேட் விஷயத்தை விஜய் மீது அப்ளை பண்ண பார்க்கிறார்கள். நான் சொல்கிறேன், அவருடைய முதல் படத்திலிருந்து விஜய்யை நான் பார்த்து வருகிறேன். மிகவும் பர்சனலாக அவரை எனக்கு தெரியும்.
இவர்கள் சொல்கிற மாதிரியான குடிப்பழக்கம் விஜய்க்கு கிடையாது. ஒருவேளை சோசியல் டிரிங்கராக ஏதாவது ஒரு பார்ட்டியில் வேண்டுமென்றால் குடிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. இவர்கள் சொல்கிற மாதிரி ஆறு மணி ஆனால் குடித்துவிட்டு கை கால்கள் எல்லாம் நடுங்கும் மாதிரியான நிலைக்கு போய்விடுவார் என்பதெல்லாம் கிடையாது. அப்படிப்பட்ட ஆளும் விஜய் கிடையாது. விஜயை பற்றி மிகவும் குளோசாக அறிந்தவன் என்கிற முறையில் நான் சொல்கிறேன்,
விஜயுடைய வாழ்க்கை முறை என்னவென்றால் இரவு 7 மணிக்கு அல்லது ஏழு முப்பது மணிக்கு அவருடைய இரவு சாப்பாடு முடிந்து விடும். அதுதான் அவருடைய அன்றாட வாழ்க்கை முறை. அதிகபட்சம் எட்டு முப்பது அல்லது ஒன்பது மணிக்கு எல்லாம் அவர் தூங்கி விடுவார் , மறுநாள் காலை ஐந்து முப்பது மணிக்கு எல்லாம் எழுந்து விடுவார். இது தான் அவருடைய வாழ்க்கை முறை. அதனால்தான் அவர் ஷூட்டிங் கால்ஷீட் கொடுக்கும் பொழுது 9 மணி முதல் 6 மணி என்ற அடிப்படையில் தான் அவர் கால்ஷீட் கொடுக்கிறார் .
ஏதாவது ஒரு நைட் எஃபெக்ட் இருந்தால் மட்டும் 9 மணி வரை இருந்து அதை முடித்துவிட்டு செல்வார். இதுதான் அவருடைய வாழ்க்கை முறை. இது எதுவுமே தெரியாமல் விஜய் ஒரு குடிகாரன், 6:00 மணிக்கு மேல் அவர் வீட்டை விட்டு வெளியே வர மாட்டார் என்று சொல்வதெல்லாம் ஒரு கேவலமான குற்றச்சாட்டு. நான் என்ன சொல்கிறேன் என்றால் விஜய் இப்போது அரசியலுக்கு வந்துவிட்டார் .அரசியல் ரீதியாக அவரை நார் நாராக கிழிங்க, அவரை கடுமையாக விமர்சனம் பண்ணுங்க ,அதற்கு உங்களுக்கு உரிமை இருக்கிறது. அதை விட்டுவிட்டு இப்படி பேசுவது சரியாக இருக்காது என பிஸ்மி கூறியிருக்கிறார்.