Dhanush: கோடிகள் வச்சிருந்தால் சந்தோஷம் கிடைச்சிடுமா? நிம்மதியில்லாமல் அலையும் தனுஷ்

Published on: December 21, 2025
dhanush
---Advertisement---

புகழ்பெற்ற நடிகர்:

தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் தனுஷ். அவருடைய அண்ணன் செல்வராகவன் ஒரு திறமையான இயக்குனர். சமீபகாலமாக செல்வராகவனுக்கும் அவருடைய மனைவி கீதாஞ்சலிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாகவும் இருவரும் விரைவில் விவாகரத்து செய்ய இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமாவில் ஒரு தனித்துவமான இயக்குனர் செல்வராகவன். அவருடைய படங்கள் இப்போது பேசப்படவில்லை என்றாலும் பிற்காலங்களில் பேசப்படும் படங்களாகவே மாறி இருக்கின்றன. அதற்கு உதாரணம் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம்.

அந்தப் படம் ரிலீஸ் ஆன போது ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. ஆனால் இப்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். அப்படி தன்னுடைய தனித்துவமான படைப்பால் ஒரு சில நல்ல படங்களை செல்வராகவன் கொடுத்திருக்கிறார். ஆனால் அவருக்கு இருக்கும் பிரச்சனை சொன்ன தேதியில் படத்தை முடிக்காமல் இருப்பது தான். அதனால் பல தயாரிப்பாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி இருக்கிறது. 7g ரெயின்போ காலனி திரைப்படமும் அப்படித்தான் அமைந்தது. அந்த படத்தை சொன்ன தேதியில் முடிக்காமல் அப்போது அவரிடம் உதவியாளராக இருந்தவர் அவருடைய இப்போதைய மனைவி கீதாஞ்சலி.

செல்வராகவனின் பழக்கம்:

அவர்தான் அந்த படத்தை எடுத்து முடித்துக் கொடுத்தார் என்ற ஒரு தகவல் இருக்கிறது. அதைப்போல ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு தாமதமானதற்கு காரணமே செல்வராகவன் தான். அதை தயாரித்தது ஒரு தெலுங்கு தயாரிப்பாளர். அந்தப் படம் சொன்ன தேதியில் முடிக்காமல் இருந்ததனால் அந்த தயாரிப்பாளர்களுக்கு பல கோடி நஷ்டம்.. படமும் எதிர்பார்த்த அளவு போகவில்லை. அதேபோல வாய்ப்புகள் இல்லாமல் இருந்த செல்வராகவனுக்கு திடீரென ஒரு வாய்ப்பு கொடுத்தார் சூர்யா. அவரை வைத்து என் ஜி கே திரைப்படத்தை எடுத்தார் செல்வராகவன். அந்த படத்தில் அமைந்த அத்தனை நடிகர்களுமே முன்னணி நடிகர்கள்.

ஆனால் அந்தப் படமும் சரியாக எடுக்கப்படவில்லை. இப்படி வந்த வாய்ப்புகளை எல்லாம் சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் இருந்துவிட்டார் செல்வராகவன். இதற்கிடையில் அவர் ஒரு ட்ரக் அடிக்டராகவும் இருந்துள்ளார். அதனால் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அதன் பிறகு மீண்டு வந்தார். இப்போது அந்த பழக்கங்கள் அவருக்கு இல்லை. 7ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தின் போது அவருக்கும் சோனியா அகர்வாலுக்கும் இடையே காதல் மலர்ந்தது. அதன் பிறகு சோனியா அகர்வால் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர்களுடைய திருமண வாழ்க்கை ஒரு சில ஆண்டுகள் மட்டுமே தாக்கு பிடித்தது. சோனியா அகர்வால் விவாகரத்து செய்து அவருடைய உதவியாளராக இருந்த கீதாஞ்சலியை காதலித்து திருமணம் செய்தார்.

மீட்டெடுக்க வேண்டும்:

ஆனால் இப்போது அந்த வாழ்க்கையும் அவருக்கு கடைசிவரை நீடிக்குமா நீடிக்காதா என்ற ஒரு சந்தேகம் இருக்கிறது. திடீரென கீதாஞ்சலி தன்னுடைய இன்ஸ்டா பக்கத்திலிருந்து செல்வராகவன் சம்பந்தப்பட்ட புகைப்படங்களை நீக்கி உள்ளார். இது ரசிகர்களிடையே பெரும் சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது. அதற்கு ஏற்ப செல்வராகவனும் சில பதிவுகளை வெளியிட்டு இருந்தார். தனிமையில் இனிமை காண முடியும் .சுற்றி இருந்தவர்கள் துரோகம் செய்து விட்டார்கள் என்றெல்லாம் கூறி ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அவருடைய தம்பி தனுஷ் பல கோடிகள் இருந்தாலும் அவர் சந்தோஷமாக இருக்கிறாரா நிம்மதியாக இருக்கிறாரா என்றால் இல்லை.

அவர் எங்கு நிம்மதியாக இருக்கிறார்? வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு வரும் பொழுது நம்மை ஆரத் தழுவ ஒரு குடும்பம் இருக்க வேண்டும். அப்போதுதான் நிம்மதி கிடைக்கும். அந்த வகையில் இப்போது செல்வராகவனும் தனிமையில் தான் இருந்து வருகிறார். கூடிய சீக்கிரம் இது விவாகரத்தை நோக்கி செல்லும் என்று தான் சொல்லப்படுகிறது. ஆனால் இதை ஆரம்பத்திலேயே தனுஷும் அவருடைய அப்பா கஸ்தூரிராஜாவும் சரி செய்ய முடியும்.

சரி செய்தால் மட்டுமே செல்வராகவனை மீட்டெடுக்க முடியும். இல்லையென்றால் அவர் ஒரு மன உளைச்சலிலேயே இன்னும் வேறு கெட்ட பழக்கங்களுக்கு ஆளாகிவிட முடியும். ஆனால் திரும்பவும் ட்ரக்கை அவர் தொட்டால் கண்டிப்பாக அவர் உயிருக்கு ஆபத்து என முன்பே மருத்துவர்கள் சொல்லி இருக்கிறார்கள். அந்த அளவுக்கு போகாமல் அவருடைய குடும்பம் தான் அவரை பார்க்க வேண்டும் என இந்த தகவலை பிரபல பத்திரிக்கையாளர் திண்டுக்கல் வெங்கடேஷ் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.